in

முதல்வர் திட்ட முகாமை அமைச்சர் செஞ்சி.மஸ்தான் தொடங்கி வைத்து பேச்சு

முதல்வர் திட்ட முகாமை அமைச்சர் செஞ்சி.மஸ்தான் தொடங்கி வைத்து பேச்சு

 

முத்தமிழ் அறிஞர் கலைஞரைப் போல தொலைநோக்கு சிந்தனையுடன் சிந்தித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சி செய்து வருவதாக மரக்காணம் ஒன்றியத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை அமைச்சர் செஞ்சி.மஸ்தான் தொடங்கி வைத்து பேச்சு.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியம் சிங்கனூர் ஊராட்சி ஜக்காம்பேட்டையில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது. மரக்காணம் ஒன்றிய பெருந்தலைவர் தயாளன் தலைமை தாங்கினார், துணை பெருந்தலைவர் பழனி முன்னிலை வகித்தார். வட்டாட்சியர் சிவா அனைவரையும் வரவேற்றார்.இந்த முகாமில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் கலந்து கொண்டு மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை தொடங்கி வைத்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று கணினி மூலம் பதிவு செய்து பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காண வேண்டும் என அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு வேளாண் இடு பொருட்களையும்,மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தினை அவர் வழங்கினார்.

அப்போது நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான்:

பொதுமக்களுக்கு வேண்டிய அனைத்து சேவைகள் மற்றும் கோரிக்கைகள் விரைவாக நிறைவேற்றிட வேண்டும்., என்ற வகையில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஊரகப் பகுதிகளில் செயல்படுத்துவதற்கு உத்தரவிட்டுள்ளார்.

அந்த வகையில் மக்களுடைய தேவையை கேட்டு தெரிந்து அறிந்து அதை நிறைவேற்றி தர வேண்டும்., என்ற தொலைநோக்கு சிந்தனையுடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இத்திட்டத்தில் கொடுக்கப்படும் பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் பரிசிலனை செய்து உடனுக்குடன் மக்களுக்கு நன்மை கிடைப்பதற்காக இத்திட்டத்தை முதலமைச்சர் செயல்படுத்தி உள்ளதாக தெரிவித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆட்சி பொறுப்பேற்ற மூன்றாண்டு காலத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் செய்த திட்டங்கள் இன்று ஒவ்வொரு இல்லத்திலும் மக்களுடைய உள்ளத்திலும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இருக்கிறார் என்பதைதான் உங்கள் இல்லத்தில் ஸ்டாலின் என பெருமையுடன் சொல்கிறோம். மேலும் கலைஞரைப் போல தொலைநோக்கு சிந்தனையுடன் சிந்தித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சி செய்து வருவதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர். சேகர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சேதுநாதன், மாவட்ட பொருளாளர் ரமணன், மாவட்ட துணைச் செயலாளர் ரவிக்குமார், ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், மரக்காணம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சரவணன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கண்ணியம்மாள், நாகஜோதி கணேஷ், வேலாயுதம், விநாயகம், ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ்குமார், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் தேவதாஸ் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக வட்டார வளர்ச்சி அலுவலர் சிவநேசன் நன்றி கூறினார்.

What do you think?

திமுக சார்பில் திமுக செயல் வீரர்கள் கூட்டம் ரெட்டனையில் நடைபெற்றது

பிஎம்ஸ்ரீ திட்டத்தின் மூலம் புதிய கல்விக் கொள்கையில் இணைய வேண்டும் என- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி