in

குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் திடீர் உயிர் இழப்பு

குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் திடீர் உயிர் இழப்பு

‘தங்கல்’ படத்தில் பபிதா குமாரி கதாபாத்திரத்தில் அமீர் கானுக்கு மகளாக நடித்தவர் சுஹானி.

இப்படம் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியானது, தங்கல் படத்தில் நடிக்கும் சுஹானி நடித்த பொழுது அவருக்கு வயது 11. அதன் பிறகு படிப்பின் காரணமாக நடிக்கவில்லை, சமிபத்தில் சில தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார்.

டெல்லியில் குடும்பத்துடன் வசித்து வந்த இவர் கடந்த ஆண்டு கார் விபத்தில் சிக்கினார். விபத்தில் இவருக்கு கால் முறிவு ஏற்பட்டது. அதன் காரணமாக பக்க விளைவு ஏற்பட்டு சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சில நாட்களாக உடல்நிலை மோசம் அடைந்த நிலையில சுஹானி திடீரென்று உயிரிழந்தார். வெறும் 19 வயதான சுஹானியின் மறைவிற்கு அமீர்கான் மற்றும் தங்கல் பட குழுவினர் தங்களது இரங்கலை தெரிவித்தனர்.

கலைஞர் கூறியதுபோல…

உதிராத மலரில்லை…
உலராத பனி இல்லை
புதிரான வாழ்கையில்
புதை பொருள் ஒன்றும் இல்லை
உடையாதா சங்கில்லை
ஒடுங்காத மூச்சில்லை
இயற்கை நியதியில் … இறப்பும் ஒன்று….

கனத்த இதயத்துடன் நாமும் நம் இரங்கலை தெரிவித்து கொள்வோம்.

What do you think?

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெண் பக்தர் 140 கி மீ பாதயாத்திரையாக பழனி கோயிலுக்கு சுவாமி தரிசனம்

கட்சியின் பெயரில் மாற்றம் செய்த தளபதி விஜய்