in

பெருமாள் ஆலயத்தில் பஜனை பாடல்களுடன் கோலாட்டம் ஆடி வழிபாட்டில் ஈடுபட்ட குழந்தைகள்

பெருமாள் ஆலயத்தில் பஜனை பாடல்களுடன் கோலாட்டம் ஆடி வழிபாட்டில் ஈடுபட்ட குழந்தைகள்

 

நவராத்திரியை முன்னிட்டு மாதிரிமங்கலம் பெருமாள் ஆலயத்தில் பஜனை பாடல்களுடன் கோலாட்டம் ஆடி வழிபாட்டில் ஈடுபட்ட குழந்தைகள்.

நவராத்திரி பண்டிகை மயிலாடுதுறை மாவட்டத்தில் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டிருக்கின்றது.

அதன் ஒரு பகுதியாக குத்தாலம் சுபிக்ஷா இந்தி வித்தியாலய பள்ளி மாணவிகள் தினமும் ஒரு கோயிலில் பஜனை பாடல்கள் பாடி கோலாட்டம் ஆடி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

அதன்படி நேற்று மாதிரிமங்கலம் வைகுண்டநாதர் பெருமாள் ஆலயத்தில் பக்தி கலை நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான பெண் குழந்தைகள் லலிதா நவரத்தின மாலை அச்சுதாஷ்டகம் கிருஷ்ணாஷ்டகம் மேலும் பல பஜனைகளை பாடி கோலாட்டம் ஆடி வழிபாடு நடத்தினர்.

முன்னதாக பெருமாளுக்கும் தாயாருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

What do you think?

மாற்றுக் கட்சியிலிருந்து விலகி 200க்கும் மேற்பட்ட திமுகவில் இணைந்தனர்

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் மோகினி அலங்கார புறப்பாடு