in

பெற்றோர்களுடன் நுங்கு சாப்பிட்டு நொங்கு வண்டி ஓட்டி மகிழ்ந்த குழந்தைகள்


Watch- YouTube Click

நுங்கு சாப்பிட்டு நொங்கு வண்டி ஓட்டி மகிழ்ந்த குழந்தைகள் மத்தியில் பெற்றோர்களும் நுங்கு வண்டி ஓட்டி மகிழ்ந்த சுவாரசியம்

கோடைகாலத்தில் குழந்தைகளை கவரும் வண்ணம் அரசு அருங்காட்சியகம் பல்வேறு கோடைகால பயிற்சிகளை வழங்கி வரக்கூடிய வேளையில்

இன்றைய தினம் பனை மரத்திலிருந்து கிடைக்கக்கூடிய நுங்கு சாப்பிடுவது எப்படி நுங்கு வண்டி தயாரிப்பது எப்படி நொங்கு வண்டியில் விளையாடுவது எப்படி என்கின்ற செயல்முறை விளக்கம் வழங்கப்பட்டது

சிறப்பாக நுங்கு வண்டி போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழுடன் கூடிய பரிசுகள் வழங்கப்பட்ட நிலையில்

50க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்களது பெற்றோர்களுடன் இணைந்து வந்து இந்த நுங்கு பயிற்சி மற்றும் நுங்கு வண்டி ஓட்டும் போட்டியில் கலந்து கொண்டனர்

குறிப்பாக
தமிழ்நாட்டின் மாநில மரமாக உள்ள பனைமரம் பணம் அதிகம் தரக்கூடிய ஒரே மரம் என்றால் பனமரமான -பனைமரம்

அந்தப் பனை மரத்தில் விளையக்கூடிய நுங்கு குழந்தைகள் உட்பட அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய சத்துக்கள் நிறைந்த ஒரு ஒன்றாக இருந்து வருகிறது

ஒரு பனைமரம் தனது வேரில் சற்றேறக்குறைய 24 ஆயிரம் லிட்டர் நீரை சேமித்து வைக்கிறது என்று சொல்லக்கூடிய நிலையில்

கடலில் மண்ணரிப்பை தடுப்பதற்கும் காற்றின் வேகத்தை கட்டுப்படுத்தவும் கார்பனை மறுசுழற்சி செய்வதற்கும் தண்ணீரை சேமிப்பதற்கும் பெரிதும் உதவக்கூடிய பனைமரம் பல்வேறு பயன்கள் நிறைந்தது

பனை மரத்திலிருந்து ஏராளமான பொருட்கள் நமக்கு கிடைக்கக்கூடிய நிலையில்

அவற்றிலிருந்து பனைவெல்லம் பதநீர் உள்ளிட்டவைகள் நமக்கு கிடைக்கப்பெறக்கூடிய நிலையில்

தற்போது இருக்கக்கூடிய காலச் சூழலில் கோடை விடுமுறையில் இருக்கும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நமது பாரம்பரியத்தை விளக்கும் வண்ணமும் அவர்களுக்கு பயிற்சி கொடுக்கும் வண்ணம் தமிழக அரசு அருங்காட்சியகம் மூலம் பல்வேறு கோடைகால பயிற்சிகளை நடத்தி வரக்கூடிய வேளையில்

மதுரையில் காந்தி நினைவு அருங்காட்சியவளாகத்தில் அமைந்துள்ள அரசு அருங்காட்சியகத்தில்

இன்று நுங்கு சாப்பிடுவது எப்படி என்கின்ற பயிற்சி அளிக்கப்பட்டது

அதேபோன்று நுங்கு சாப்பிட்ட பிறகு அவற்றை வைத்து குழந்தைகள் வண்டியாக தயாரித்து எவ்வாறு விளையாடலாம் என்கின்ற செயல்முறை பயிற்சியும் அவர்களுக்கு வழங்கப்பட்டது

குழந்தைகளோடு வந்திருந்த பெற்றோர்களும் ஆர்வமாக நுங்கு சாப்பிடுவது எப்படி என்று குழந்தைகளோடு இணைந்து சாப்பிட்டதோடு மட்டுமல்லாது குழந்தைகளாகவே மாறி ஒரு கட்டத்தில் அவர்களும் நுங்கு வண்டி போட்டியில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது

.என்னதான் இன்றைய நவநாகரீக உலகில் எத்தனையோ ஆன்லைன் கேம்கள இருந்தாலும்
சாப்பிட்ட நுங்கில் தயாரிக்கப்பட்ட வண்டியை லாபமாக பிடித்து தங்களது பிஞ்சு விரல்களால் காந்தி நினைவு அருங்காட்சிய வளாகத்தில் சக மாணவர் போட்டியாளர்களிடையே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நுங்கு விளையாட்டுப் போட்டியில் பங்கு பெற்றது குறிப்பிடத்தக்கது

இந்த பயிற்சியில் குழந்தைகள் அவருடைய பிஞ்சு விரல்களால் லாபகமாக அந்த நுங்கை எடுத்து ருசித்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்

என்னதான் நாம் அன்றாடம் உப்பு புளி காரம் என வெவ்வேறு விதமான உணவு வகைகளை உண்டாலும் சற்று துவர்ப்புடன் கூடிய இந்த நுங்கை அனைவரும் விரும்பி உண்டு மகிழ்ந்தனர்

எத்தனை விளையாட்டுக்கள் இருந்தாலும் இன்றளவும் கிராமப்புறங்களில் இந்த நொங்கு வண்டி பயன்பாட்டில் இருக்கத்தான் செய்கிறது


Watch- YouTube Click

What do you think?

காவிரி கூக்குரல் இயக்கம் சார்பில் விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கிய எம்எல்ஏ

இன்ஸ்டாகிராம் மோகத்தால் பைக் ரேஸ் செய்த இளைஞர்களால் சர்ச்சை