in

ஹிந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழகத்தில் அரசு பேருந்தில் சீன மொழி


Watch – YouTube Click

ஹிந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழகத்தில் அரசு பேருந்தில் சீன மொழி இடம் பெற்றதால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி.

தென் தமிழகத்தின் பிரதான பேருந்து நிலையமாக திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையம் செயல்பட்டு கொண்டு வருகிறது. இந்த காமராஜர் பேருந்து நிலையத்திலிருந்து சென்னை, கோவை, திருப்பூர் ,காரைக்குடி, தேனி, கம்பம் ,கோவை, கன்னியாகுமரி, ராமேஸ்வரம், பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு தென் தமிழகத்திற்கும் வட தமிழகத்திற்கும் இரவு பகலாக சுமார் ஆயிரம் பேருந்துகள் இந்தப் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் உள்ள அரசு பேருந்துகளில் உலக பொது மறை வாக்கியமான திருக்குறளையும் அதனுடைய அதிகாரங்களையும் பேருந்தில் இடம் பெற செய்து தமிழின் பெருமைகளை உணர்த்தும் விதமாக தமிழக அரசு நடவடிக்கைகள் எடுத்து உள்ளது. ஆனால் திண்டுக்கல் மாவட்டம் மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட

TN 57 N 2410 என்ற அரசு பேருந்தில் திண்டுக்கலில் இருந்து பொள்ளாச்சி செல்லும் அரசு பேருந்து என்று இடம் பெற்றிருக்கும் மின்னணு பெயர் பலகையில் சீன மொழி இடம் பெற்று பேருந்து நிலையத்திற்கு வந்தது. அந்த அரசு பேருந்து சீன மொழியிலேயே பேருந்து நிலையத்திலிருந்து பொள்ளாச்சிக்கு சென்றதால் பேருந்தில் ஏற இருந்த பயணிகளும் காத்திருந்த பயணிகளும் தமிழ் சொற்களுக்கு பதிலாக சீன மொழி இடம்பெற்று இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர் .தமிழ் நாட்டில் ஹிந்தி மொழிக்கே எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழகத்தில் சீன மொழியுடன் அரசு பேருந்து இயங்கியது பெறும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது .


Watch – YouTube Click

What do you think?

பாடலுக்கு பாடல் ஆசிரியரும் உரிமை கேட்டால் இளையராஜாவுக்கு குட்டு வைத்த நீதிமன்றம்

நாட்டு வெடிகுண்டு வைத்து காட்டுப் பன்றியை வேட்டையாடிய மூன்று நபர்களுக்கு அபராதம் விதிப்பு