சின்ன குயில் சித்ரா தனது மகளின் நினைவு நாளில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்
ஆறு ஃபிலிம் ஃபேர் அவார்ட் பத்மபூஷன் விருது மற்றும் பல்வேறு மாநிலங்களில் விருது என்று ஏகப்பட்ட விருதுகளுக்கு சொந்தக்காரர் சின்ன குயில் சித்ரா பேரும் புகழும் பெற்ற இவருக்கு குழந்தை செல்வம் இல்லை என்ற வருத்தம் மட்டும் இவரை எப்பொழுதும் வாட்டிக் கொண்டே இருக்கும் இவர் விஜயசங்கர் என்பவரை 1988 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் பல ஆண்டுகள் இவர்களுக்கு குழந்தை இல்லாமல் இருந்த நிலையில் 14 ஆண்டு காலம் கழித்து குழந்தை பெண் குழந்தை பிறந்தது ஆனால் அந்த குழந்தை ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டிருந்தது நந்தனா என்ற அந்த குழந்தையுடன் துபாயில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்றார் ஹோட்டல் ரூமில் தங்கி இருந்தபோது குழந்தை நீச்சல் குளத்தில் தவறுதலாக விழுந்து இரந்தது இந்த சம்பவத்தால் மிகுந்த மன அழுத்தத்திலிருந்த சித்ரா படிப்படியாக அதிலிருந்து வெளியேறி மீண்டும் தனது கலை பயணத்தில் கவனம் செலுத்தி வருகிறார் பலரும் இவரிடன் குழந்தையை தத்தெடுக்க வற்புறுத்திய பொழுதும் வயதினை காரணம் காட்டி தத்தெடுக்க மறுத்துவிட்டார் தன் மகளின் ஒவ்வொரு நினைவு நாளிலும் அவருக்காக ஒரு குறிப்பு எழுதுவது சித்ராவின் வழக்கம். மகள் நினைவு நாளை ஒட்டி சமூக வலைத்தளத்தில் ஒரு உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்
அதில் உன்னை என்னால் இனி தொட முடியாது உன் பேச்சை கேட்கவும் உன்னை பார்க்கவும் முடியாது நீ என் இதயத்தில் இருப்பதால் என்னை எப்பொழுதும் உணர முடிகிறது என் அன்பே நாம் ஒருநாள் மீண்டும் சந்திப்போம் உன்னை இழந்த வலி அளவிட முடியாது வானத்தில் பிரகாசிக்கும் நட்சத்திரம் நீ என்பதை அறிவேன் படைப்பாளர்களின் உலகத்தில் நீ நன்றாக வாழ்வாய் என்ற நம்பிக்கை இருக்கிறது என பதிவிட்டுள்ளார்