in

தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

 

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 18 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மே 7 ஆம் தேதி நடைபெறுகிறது.

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டுதோறும் 18 நாட்கள் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இதேபோல் இந்த ஆண்டு சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொடியேற்றத்தை முன்னிட்டு பிரம்மாண்ட கொடி மரம் அருகே விநாயகர் மற்றும் அம்பாளுடன் சந்திரசேகர் எழுந்தருள கொடிமரத்திற்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், திரவிய பொடி உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் வழங்கிய துணிகளை கொண்டு நந்தி பெருமான் வரையப்பட்ட பிரம்மாண்ட கொடிமரத்தில் சிவ கனங்கள் இசைக்க கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து மகா தீபாரதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

18 நாட்கள் நடைபெறும் விழாவினை முன்னிட்டு தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற மே 7ஆம் தேதி நடைபெறுகிறது.

What do you think?

அதிக சம்பளம் வாங்கும் ஒரே இயக்குனர்

திருப்பத்தூர் அருள்மிகு பூமாயி அம்மன் கோயில் வசந்த பெருவிழா  பால்குடம் வழிபாடு