in

சித்திரை திருவோணம் – 1008 சங்காபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம்

சித்திரை திருவோணம் – 1008 சங்காபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம்

 

இராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தா் திருக்கோவில் சித்திரை திருவோணம் – 1008 சங்காபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம். ஏராளமான பக்தா்கள் தாிசனம்.

ஆடல் வல்லானாகிய நடராஜப் பெருமானுக்கு ஒரு ஆண்டில் ஆறுமுறை அபிஷேகம் செய்ய வேண்டும் என்று ஆகம விதிகள் கூறுகின்றன. மூன்று முறை திதியிலும், மூன்று முறை நட்சத்திர நாளிலும் அபிஷேகங்கள் நடக்கின்றன.

இதில் மிகச்சிறப்பானது மார்கழி திருவாதிரை. மற்றவை சித்திரை, திருவோணம் மற்றும் ஆனி உத்திர நட்சத்திர நாட்களாகும். ஆவணி, புரட்டாசி மாசி மாத வளர்பிறை சதுர்த்தசி திதிகளிலும் அவருக்கு அபிஷேகம் செய்யப்படும். தேவர்களுக்கு வைகறைப் பொழுது மார்கழி மாதம், காலைப் பொழுது மாசி மாதம், உச்சிக் காலம் சித்திரை, மாலைப் பொழுது ஆனி, இரவுப் பொழுது ஆவணி, அர்த்த சாமம் புரட்டாசி என முன்னோ்கள் சொல்வா். இன்று சித்திரை திருவோணம். இது உச்சிக்கால பூஜை ஆகும்.

அதனையொட்டி நெல்லை மாவட்டம் இராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தா் திருக்கோவில் ஸ்ரீ நடராஜருக்கு 1008 சங்காபிஷேம் நடைபெற்றது. இதற்காக அதிகாலை திருக்கோயில் நடை திறக்கப்பட்டு காலைசந்தி பூஜைகள் நடைபெற்றன.

முன்னதாக நேற்று காலை ஸ்ரீநடராஜரும் சிவகாமி அம்பாளும் சபையில் இருந்து திருமஞ்சன மண்டபத்திற்க ஏழுந்தருளி கோபூஜை நடைபெற்று பால் அபிஷேகம் நடைபெற்றது. இன்று காலையில் யாகசாலையில 1008 சங்ககள் வைத்து பூஜைகள் நடைபெற்றன.

அபிஷேக பீடத்திற்கு ஏழுந்தருளியுள்ள சுவாமி அம்பாளுக்கு மஞ்சள், மப்பொடி, வாசனைப்பொடி, பால். தயில் பஞ்சாமிருதம், தேன். நெய், அன்னம், வீபூதி மற்றும் சந்தணம் கொண்டு சிறப்பாக அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடா்ந்து யாகசாலையில் கோபுர ஆரத்தி காண்பித்து கடம் புறப்பாடு நடைபெற்றது. பின்னா் ஆடலவ்லானுக்கு 1008 சங்காபிஷேகம் மற்றும் கலாசாபிஷேகம் மகா அபிஷேகங்கள் நடைபெற்றது.

சிறப்பு அலங்காரத்தில் இருந்த நடராஜ பெருமானுக்கு நடன ஆரத்தி காண்பிக்கப்பட்டது. பின்னா் கோயில் பிரதஷ்வணமாக சுற்றி வ்நது நடராஜா் தாமிர சபைக்கு ஏழுந்தருளினாா். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

What do you think?

இட்லி கடை செட்டில் தீ விபத்து

பாளையங்கோட்டை எல்லையம்மன் திருக்கோவில் பூக்குழி இறங்கும் விழா