ஆட்டோவில் தப்பித்து ஓடிய சியான்
வீர தீர சூரன் பாகம் 2 மார்ச் 27 அன்று திரையரங்குகளில் வெளியானது, இப்படத்தில் சியான் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சாரமூடு, துஷாரா விஜயன் ஆகியோர் நடித்துள்ளனர்.
சியான் விக்ரமின் படங்கள் வெற்றி பெறாவிட்டாலும், அவற்றைப் பார்க்கத் தூண்டும் அம்சம் படத்தில் இருக்கும் . எஸ்.யு.அருண் குமார் இயக்கிஇருக்கிறார்’ இத்திரைப்படம் கடைசி பிரச்சனைகளை முறியடித்து நேற்று மாலை திரையிடப்பட்டது.
சில பிரபலங்கள் தியேட்டர்…இக்கு வருகை தந்து விக்ரம் படத்திற்கு ஆதரவு தெரிவித்த நிலையில் விக்ரமும் நேற்று சத்தியம் தியேட்டருக்கு ரசிகர்களுடன் திரைப்படம் பார்க்க வந்தார்.
துஷாரா விஜயன், சிவகார்த்திகேயன், நடிகர் விக்ரம் மற்றும் பட குழுவினர்களுடன் இணைந்து சத்யம் தியேட்டருக்கு வந்த போது ரசிகர்கள் அவரை சூழ்ந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
அசம்பாவிதம் நடக்காமல் தடுக்க வேண்டும் என்பதற்காக விக்ரம் கூட்டத்திலிருந்து தப்பித்தால் போதும் என்று தனது காரை கூட எடுக்காமல் அருகில் இருந்த ஆட்டோவில் ஏறி தியேட்டரில் இருந்து வெளியேறி விட்டார்.