in ,

கும்பகோணம் அருகே சோழபுரம் ஸ்ரீ மஹா காளியம்மன் ஆலய ஆறாம் ஆண்டு பால்குட திருவிழா…

கும்பகோணம் அருகே சோழபுரம் ஸ்ரீ மஹா காளியம்மன் ஆலய ஆறாம் ஆண்டு பால்குட திருவிழா…

 

திரளான பக்தர்கள் பால்குடம் அக்னிசட்டி காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்….

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சோழபுரம் கீழத்தெரு அன்பு நகரில் எழுந்தருளியிருக்கும் வெற்றி மகாகாளியம்மன் ஆலயத்தின் ஆறாம் ஆண்டு பால்குடை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

முன்னதாக மண்ணியாற்றங்கரையில் இருந்து பால்குடம் கரகம் காவடி காளிநடனத்துடன் முக்கிய வீதிகள் வழியாக வந்து ஸ்ரீ மகாகாளியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தொடர்ந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் சிறப்பு அலங்காரம் செய்து மகாதீபாரதம் காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை சோழபுரம் கீழத்தெரு அன்புநகர் கிராமவாசிகள் நாட்டாமைகள் பஞ்சாயத்தார்கள் செய்திருந்தனர்.

What do you think?

குறிக்காறகருப்பண்ன சுவாமி ஆலயத்தில் ஆவணி மாத சிறப்பு அபிஷேக ஆராதனைகள்

மருத்துவக் கல்வி பயில தோ்வான 14 மாணவ, மாணவிகளின் சோ்க்கைக்கான உத்தரவை முதல்வா் ரங்கசாமி வழங்கினாா்