in

சங்கி .. தப்பான வார்த்தை இல்லை தலைவர் ரஜினி சொல்லிட்டார்… சர்சையை முடிச்சிக்…கோங்க..பா


Watch – YouTube Click

சங்கி .. தப்பான வார்த்தை இல்லை தலைவர் ரஜினி சொல்லிட்டார்… சர்சையை முடிச்சிக்…கோங்க..பா

எங்க அப்பா சங்கி இல்லை என ஐஸ்வர்யா சொன்னாலும் சொன்னாங்க ‘சங்கி’ என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று ‘சேது விக்ரம்’ போல் எல்லோரும் dictionary எடுத்து தேடாத குறையாக மண்டையை பிச்சிக்கிராங்க.

ரஜினிகாந்த் அவர்கள் தன் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் ‘லால்சலாம்’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். அப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றபோது ஐஸ்வர்யா ராய் கூறியதாவது.

என் அப்பாவை எல்லோரும் சங்கி என்று சொல்கிறார்கள் அவர் சங்கி கிடையாது என்று கோபமாக கூறியது பெரும் சர்ச்சையாகி விட்டது. இது என்ன கெட்ட வார்த்தையா என்று எல்லோரும் கேள்வி கேட்க பத்திரிகையாளர்களுக்கும் அதே டவுட் வந்துததால் ரஜினி அவர்களை விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தி நிருபர் ஒருவர் கேள்வி கேட்டார் அதற்கு பதில் அளித்த ரஜினிகாந்த் அவர்கள் சங்கி கெட்ட வார்த்தை என்ற அர்த்தத்தில் என் மகள் கூறவில்லை.

தனது அப்பா ஆன்மீகவாதி அனைத்து மதங்களையும் விரும்புகிறவர். அவரை ஏன் இப்படி சொல்கிறீர்கள் என்று தனது ஆற்றாமையை தான் வெளிப்படுத்தினார், ஆனால் இதை ஏன் சர்ச்சையாக்கினார்கள் என்று தான் தெரியவில்லை.

‘லால் சலாம்’ படம் அருமையாக வந்திருக்கிறது, நான் படப்பிடிப்புக்காக அவசரமாக போய்க் கொண்டிருக்கின்றேன் ப்ளீஸ் என்று நைசாக விடை பெற்று விட்டார்.

ரஜினிகாந்த் கூறிய அர்த்தம் போதவில்லை என்று, யார் என்ன சொன்னாலும் நாங்களும் கருத்து கூறுவோம் என்று வானதி சீனிவாசன் அவர்கள் அவர் பங்குக்கு சங்கி என்ற வார்த்தைக்கு அர்த்தம் கூறியிருக்கிறார்.

நாட்டை நேசிக்கும் யாராக இருந்தாலும் அவர்களை நாங்கள் சங்கி என்று தான் கூறுவோம் சங்கி என்று சொல்லிக் கொள்வதில் நாங்கள் பெருமை கொள்கிறோம் எங்கள் கொள்கைக்கு எதிராக நிற்பவர்களையும் இந்த நாட்டை நேசிக்கும் நாட்டின் நலனின் சமரசம் செய்து கொள்ளாத யாராக இருந்தாலும் அவர்களை சங்கி என்று சொல்வதில் நாங்கள் பெருமை கொள்கிறோம் என்று மூச்சி விடாம ஒப்பிசிட்டார் .

உங்கள் தொலைநோக்கு பார்வைக்கு நன்றி மேடம்… என்று ரசிசர்கள் கலாய்ப்பது அவரின் காதில் கேட்டால் சரி. இந்த சர்ச்சை மூலம் தெரிந்து கொண்டது என்ன வென்றால் … கற்றது கை மண்ணளவு கல்லாதது உலகளவு.


Watch – YouTube Click

What do you think?

100 நாள் வேலைத் திட்ட நகலை எரித்து போராட்டம்

பழனி கோவிலில் பிற மதத்தினர் நுழைய தடை?