in

அழிந்துவரும் சர்க்கஸ் கலையை மீட்கும் சர்க்கஸ் குழுவினர்

அழிந்துவரும் சர்க்கஸ் கலையை மீட்கும் சர்க்கஸ் குழுவினர்

 

அழிந்துவரும் சர்க்கஸ் நிகழ்ச்சியை மீட்க பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் வரவழைத்து அழியும் கலையை மீட்கும் சர்க்கஸ் குழுவினர்.

மதுரை மாநகர் அரசரடி பகுதியில் அமைந்துள்ள இறையியல் கல்லூரி மைதானத்தில் கடந்த வாரம் ஜெமினி சர்க்கஸ் சார்பில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு தினமும் மூன்று கட்சிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஜெமினி சர்க்கஸ் சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

அதில் 1951-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஜெமினி சர்க்கஸ் இந்தியாவில் பல்வேறு இடங்களுக்குச் சென்று தங்களது திறமையை வெளிப்படுத்திய நிலையில், 25 முறை மதுரையில் மட்டும் ஜெமினி சர்க்கஸ் சார்பில் நிகழ்ச்சி வழங்கியுள்ளது. தங்களது சர்க்கஸில் பொதுமக்களை திருப்தி படுத்துவதற்காக ஜோக்கர், சைக்கிளிங், பவுன்சிங் பவுலிங் மற்றும் ஆப்பிரிக்கா டான்ஸ், ரஷ்யன் ராக் அண்ட் ரோல் ஆகிய நிகழ்ச்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், அழிந்து வரும் இந்த சர்க்கஸ் பொழுதுபோக்கு நிகழ்ச்சியை மீட்பதற்கு பல்வேறு நாடுகளில் இருந்து கலைஞர்களை வரவழைத்து குறிப்பாக ரஷ்யா ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் மூலம் புதிய புதிய நிகழ்ச்சிகள் வாயிலாக பத்துக்காப்பதாக தெரிவித்தனர்.

What do you think?

25 முட்டைகளுடன் கருவுற்றிருந்த பெண் நல்ல பாம்பு பலி – பொதுமக்கள் சோகம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில் ஆடி மாத பௌர்ணமி உண்டியில் காணிக்கை