வேடசந்தூர் அருகே அழகாபுரி அணை திறப்பு விழாவில் தேனீக்கள் துரத்தியதால் அலறி அடித்து ஓடிய பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அழகாபுரி அணையில் 120 டிஎம்சி தண்ணீர் ஆனது நிரம்பி மறுக்கால் பாயும் தருணத்தில் உள்ள நிலையில் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் காந்தி ராஜன், வருவாய் துறையினர் பொதுப்பணித்துறையினர் ,குடிநீர் வடிகால் வாரியத்தினர், விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் என சுமார் 200க்கும் மேற்பட்டோர் அழகாபுரி டேமில் சிறப்பு பூஜைகள் செய்த பின்னர் மலர் தூவி பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக மதகைத் திறந்து வைத்தனர். பின்பு அங்கிருந்து வரும்பொழுது டேமில் கூடு கட்டி இருந்த தேனீக்கள் கூட்டம் கூட்டமாக பறந்து வந்து அங்கு கூடியிருந்த வர்களை சூழ்ந்து கொட்டத் துவங்கியதால் கூடியிருந்தவர்கள் அனைவரும் அலறி அடித்து ஓடத் தொடங்கினர். அணை திறப்பு விழாவின்போது தேனீக்கள் சூழ்ந்து பொதுமக்களை தாக்க முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது