in

மயிலாடுதுறை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் துவங்கின

மயிலாடுதுறை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் துவங்கின

 

மயிலாடுதுறை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் துவங்கின, 52 தேர்வு மையங்களில் 12, 741 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.

தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு பொதுத்தேர்வுகள் இன்று துவங்கின. இன்று துவங்கி ஏப்ரல் 15 ஆம் தேதி வரை இந்த தேர்வுகள் நடைபெற உள்ளன.

6184 மாணவர்களும் 6202 மாணவிகளும், 355 தனித்தேர்வர்களும் ஆக மொத்தம் கூடுதல் 12,741 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். இதற்காக 52 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்வு பணிக்காக வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், முதன்மை கண்காணிப்பாளர்கள் துறை அலுவலர்கள் வழித்தட அலுவலர்கள் மற்றும் அறை கண்காணிப்பாளர்கள் என 772 ஆசிரியர்கள் தேர்வு பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்வு முறைகேடுகளை தவிர்க்க 62 நிலையான பறக்கும் படை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளி மற்றும் சீர்காழி எஸ்எம்எஸ் மேல்நிலைப் பள்ளியில் வினாத்தாள் திருத்தும் மையமாக அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு ஆயுதம் ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று நடைபெற்ற பொது தேர்வில் மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று உள்ளனர்.

What do you think?

ஜன நாயகன் First சிங்கள் எப்போது

பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடைபெறும் தேர்வு மையத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் நேரில் ஆய்வு