திருப்பதி மலைப் பாதையில் தூய்மை பணி
பிரதமர் மோடியின் ஸ்வச் பாரத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு ஆந்திராவில் ஸ்வச் ஆந்திரா என்ற பெயரிலான திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இன்று ஆந்திரா முழுவதும் ஸ்வச் ஆந்திரா திட்டத்தின் கீழ் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த நிலையில் இன்று ஸ்வச் திருமலை என்ற பெயரில் திருப்பதி மலையில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அதன் ஒரு பகுதியாக திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் மலைப்பாதையில் இருபுறமும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அப்போது ஊழியர்கள் மலைப்பாதையின் இருபுறங்களிலும் போடப்பட்டிருந்த குப்பைகள், விழுந்து கிடந்த காய்ந்த சருகுகள், இலைகள் ஆகியவற்றை அகற்றி அப்புறப்படுத்தினர்.
முன்னதாக ஸ்வச் திருமலை நிகழ்ச்சியை தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கய்யா சவுத்ரி திருப்பதி மலை அடிவாரத்தில் துவக்கி வைத்தார்.