கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, தஞ்சையில் உள்ள யாதவ கண்ணன் திருக்கோவிலில் வழுக்கு மரம் ஏறுதல் வெகு சிறப்பாக நடைப்பெற்றது. இளைஞர்கள் வழுக்கு மரம் ஏறி மரத்தின் உச்சியில் இருந்த பொருட்களை எடுத்து அசத்தினார்கள்.
தஞ்சை மேலவீதியில் உள்ள யாதவ கண்ணன் திருக்கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு 24 ம் ஆண்டு வழுக்கு மரம் ஏறும் திருவிழா உறியடி நடைப்பெற்றது.
மலர்களால் அலங்கரிக்கப்பட்ட யாதவ கண்ணன் நான்கு ராஜவீதிகளில் திருவீதி உலா சென்று, கோவிலை வந்தடைந்தது. அதனை தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு. இதற்கு முன்பாக உறியடி வழுக்கு மரம் ஏறுதல் நிகழ்வு நடைப்பெற்றது. எண்ணெய் தடவப்பட்ட 40 அடி உயரம் வழுக்கு மரத்தில் இளைஞர்கள் மனித கோபுரம் அமைத்து ஏறினார்கள். அவர்கள் மீது நாலாபுறமும் தண்ணீர் வீசப்பட்டது.
இதில் பல இளைஞர்கள் போட்டி போட்டு ஏற முற்பட்டும் ஏற முடியாத நிலையில் வழுக்கு மாம் உச்சிவரை சென்று அங்கு தொங்கவிடப்பட்டு இருந்த பொருட்களை இளைஞர் ஒருவர் எடுத்து அசத்தியதோடு கூடியிருந்த மக்களுக்கு பேசியிருந்தார் அதில் வெண்ணெய் முறுக்கு அதிரசம் பிரசாதங்கள் இருந்தது. கூடி இருந்த மக்கள் கைதட்டி உற்சாகம் அடைந்தனர்.