என்ஜாய்மென்ட் மூடு…டோடு சென்றால் GOAT போர் அடிக்காது
தளபதி விஜய்யின் Greatest ஆப் ஆல் டைம் திரைபடம் என்று வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்களை வெங்கட் பிரபு கவர்ந்தார என்பதை பார்போம்.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகிய இப்படத்தில் விஜய்யுடன், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, ஜெயராம், மீனாட்சி சௌத்ரி என்று பலர் நடித்திருந்தாலும் கமீயோ ரோலில் சிவகார்த்திகேயன், திரிஷா, தோனி ஆகியோரும் ரசிகர்களுக்கு Shocking Surprise கொடுத்து இருக்கின்றனர்.
ரகசிய படையின் தலைவராக விஜய் (காந்தி) வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு எதிராக நடத்தப்படும் தீவிரவாத சூழ்ச்சிகலை முறியடிக்க விஜய் மற்றும் பிரசாந்த்துடன் பிரபுதேவா, அஜ்மல் ஆகியோர் களத்தில் இறங்குகின்றனர்.
விஜய் தனது குடும்பத்துடன் பாங்காங் செல்லும் பொழுது தனது மகனை தொலைத்து விடுகிறார். அதனால் வெறுப்படைந்த விஜய் தனது பதவியை ராஜினாமா செய்து அமைதியாக வாழ்க்கையை நடத்தி வருகிறார்.
திடீரென்று மீண்டும் சாட்டிலிருந்து அழைப்பு விடுக்க காந்தியும் Moscow சொல்கிறார். அதன்பிறகு படத்தில் அடுத்தடுத்து நடக்கும் ஆக்ஷன் காட்சிகளும், யூத் விஜய் ஆக வரும் ஜீவன் படத்தில் பன்னும் அலம்பரையும் ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக வெங்கட் பிரபு எடுத்திருக்கிறார்.
யோகி பாபு, பிரேம்ஜியின் காமெடி ரசிக்க வைக்கிறது .மேலும் A.I. டெக்னாலஜி மூலம் வரும் விஜயகாந்த்தை வைத்து தான் படமே ட்விஸ்ட்…டோடு தொடங்குகிறது.
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் கிளைமாக்ஸ் காட்சியில் செம்மயாக ஸ்கோர் செய்திருக்கிறார் வெங்கட் பிரபு.
விஜய் படத்தின் ஃபார்முலாபடி படம் முழுக்க அவருக்கு தான் Scope கொடுக்க படும். ஆனால் இந்த படத்தில் ஏகப்பட்ட சினிமா நட்சத்திரங்கள் இருந்தாலும் எல்லோரும் உணர்ந்து நடிக்க வெங்கட பிரபு ஸ்பேஸ் கொடுத்திருக்கிறார்.
Double ரோலில் மொத்த கதையும் சுமந்து நடித்திருக்கிறார் விஜய். விசில் போடு பாடலுக்கு மட்டும் தான் ரசிகர்கள் விசில் போடுகிறார்கள் மற்றபடி இசை படத்திற்கு பெரிய மைனஸ் பழைய கதையாக இருந்தாலும் வெங்கட் பிரபு ரசிகர்களை கவர டெக்னாலஜிகளை வைத்து படத்தை மாசாக கொடுத்திருக்கின்றார்.
படத்திற்கு மைனஸ் என்று பார்த்தால் இசையும் ப்ரோமோஷனில் படகுழு சில சஸ்பென்ஸ்சை உடைத்து விட்டார்கள். அதனால் படத்தின் மீது ரசிகர்களுக்கு ஆர்வம் குறைந்து விட்டது. இந்த படத்திற்காக நிறைய ரிசர்ச் (research) செய்திருக்கிறார் என்று தெரிகிறது நிறைய Information கு கொடுத்திருக்கிறார் என்ஜாய்மென்ட் மூடு…டோடு சென்றால் ரசிகர்களுக்கு போர் அடிக்காது. மொத்தத்தில் GOAT குட் ட்ரீட்..