in

செஞ்சி ஒன்றியம் ஊரணித் தாங்கள் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம்

செஞ்சி ஒன்றியம் ஊரணித் தாங்கள் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம்-அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியம் ஊரணித்தாங்கல் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டம் தொடங்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்ட கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி ஸ்ருதஞ்ஜெய்நாராயணன் தலைமை தாங்கினார்.

செஞ்சி ஒன்றிய பெருந்தலைவர் வழக்கறிஞர் ஆர். விஜயகுமார்,செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலி மஸ்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தமிழரசன் அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில்சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு மக்களுடன் முதல்வர் திட்டத்தினை தொடங்கி வைத்து பொதுமக்களிடம் இருந்து வரப்பெற்ற கோரிக்கை மனுக்களை பெற்று கணினி மூலம் பதிவு செய்தும் பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காண வேண்டுமென அவர்அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் வளர்மதி,வட்டாட்சியர் ஏழுமலை ,வட்டார வளர்ச்சி அலுவலர் சீத்தாலட்சுமி, மாவட்ட கவுன்சிலர் அகிலா பார்த்திபன்,ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.வட்டார வளர்ச்சி அலுவலர் முல்லை நன்றி கூறினார்.

What do you think?

பிள்ளையார்பட்டி ஶ்ரீ கற்பக விநாயகர் விநாயகர் திருக்கோயில் விநாயகர் சதுர்த்தி பெருவிழா

நத்தத்தில் 50 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த முன்னாள் பள்ளி மாணவர்களின் நெகிழ்ச்சியான சந்திப்பு