சாகர் கவாச் கடலோர பாதுகாப்பு ஒத்திகையை கடலோர பாதுகாப்பு போலீசார் தொடங்கினர்
சாகர் கவாச் 2 நாட்கள் கடலோர பாதுகாப்பு ஒத்திகையை புதுச்சேரி கடலோர பாதுகாப்பு போலீசார் தொடங்கினர்.
இந்திய கடல் பகுதி வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சாகர் கவாச் ஒத்திகை நடத்தப்படுகிறது.
இன்று காலை துவங்கி நாளை மாலை 5 மணி வரை சாகர் கவாச் ஒத்திகை நடைபெறுகிறது.
புதுச்சேரி கடல் பகுதியில் வாடகை மீன்பிடி படகில் தொலைநோக்கு கருவிகள் மற்றும் துப்பாக்கி இந்தியா காவலர்கள் மூலமாக பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது.
புதுச்சேரி மீனவ கிராமங்களான காலாப்பட்டு முதல் புதுகுப்பம் உள்ளிட்ட 16 கிராமங்களில் பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் தரை வழியாகவும் கடல் வழியாகவும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுச்சேரி புதிய துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட கடலோர காவல் படை எஸ்பி பழனிவேல் தலைமையில் இருந்து பணியை ஈடுபட்டனர். இவர்கள் கடல் வழியாக மீன்பிடித்து ஈடுபடும் மீனவர்களை அழைத்து தங்களுடைய முகவரி, அடையாள அட்டை, எந்த ஊர் என கேட்டனர்.
அடையாள அட்டைகளை காண்பிக்காத மீனவர்களை கடலோர காவல் நிலையத்திற்கு வந்து உரிய ஆவணங்கள் காண்பிக்குமாறு காவல்துறை அறிவுறுத்தினர். மேலும் சந்தேகம்படும்படி கடலில் தென்படும் கப்பல்கள், படகுகள் குறித்து தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடலோர பகுதிகளில் சந்தேகத்திற்குரிய நபர்கள் இருந்தாலும் கடலோர பாதுகாப்பு போலீசுக்கு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.