100 கோடி ரூபாய் வசூல் பொய்… நடிக்கவே தெரியாதா நடிகர் வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறன்
ஒரு திரைப்படம் வந்தால் படத்தைப் பற்றி இவர் கொடுக்கும் விமர்சனத்தை வைத்துத்தான் படம் பார்க்கலாமா வேண்டாமா என்று ரசிகர்கள் முடிவெடுக்கும் அளவிற்கு பக்காவாக ஒரு படத்தைப் பற்றி ரிவிவ் கொடுப்பவர் குரு சட்டை மாறன்.
ரசிகர்களிடம் கூட இயக்குனர்கள் பாஸ்மார்க் வாங்கி விடலாம். ஆனால் ப்ளூ சட்டைமாறன்..னிடம் அவ்வளவு சீக்கிரத்தில் ஒரு படத்திற்கு பாஸ் Mark போட மாட்டார்.
படத்தைப் பற்றி மட்டுமல்ல நடிகர்கள் பற்றியும் பயப்படாமல் விமர்சனம் பண்ணுபவர். அண்மையில் வெளியான மகாராஜா படத்தை பற்றி போஸ்ட் ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார் மாறன்.
அண்மையில் வெளியான படங்கலான அரண்மனை 4 மற்றும் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா 100 கோடி ரூபாயை வசூலித்து என்று தயாரிப்பாளர்கள் செய்தி வெளியிட்டிருகிறார்கள்.
ஆனால் ப்ளூ சட்டை மாறன் இந்த இரண்டு படங்களுமே நூறு கோடியை தாண்டவில்லை மனசாட்சியோடு உருட்டுங்கள் என்று போஸ் செய்துள்ளார்.
மேலும் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா படத்தை பற்றிய ஒரு செய்தி தற்பொழுது வெளிவந்திருக்கிறது . இந்த படம் 25 நாட்கள் ஓடியதாகவும் 100 கோடிக்கு மேல் வசூல் செய்த பிளாக் பஸ்டர் மூவி என்று செய்திகள் வெளியாகி உள்ளது.
இதனை தனது எக்ஸலத்தில் பகிர்ந்த ப்ளூ சட்டை மாறன் பொய் சொல்லலாம், ஒரு நியாயம் தர்மம் வேண்டாமா என்று பதிவிட்டுள்ளார்.
விஜய் ஆண்டனியின் ரோமியோ படம் ரிலீஸ் ஆனதிலிருந்து ப்ளூ சட்டை மாறனுக்கும் விஜய் ஆண்டனிக்கும் சமூக வலைத்தளங்களில் சண்டை வலுத்ததற்கு காரணம் ரோமியோ படம் சுமாராக இருக்கிறது என்று ப்ளூ சட்டை மாறன் போஸ்ட் செய்திருக்கிறார்.
அதனால் விஜய் ஆண்டனி …க்கும் இவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் கடந்த வாரம் எந்த நடிகருக்கு நடிக்கவே தெரியாது என்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது அதில் விஜய் ஆண்டனியின் பெயரை சேர்த்து வம்பு..இழுத்திருக்கிறார் ப்ளூ சட்டை மாறன் தற்போது விஜய் சேதுபதியை குறி வைத்து இருக்கிறார்.