ஜவ்வாது மலையில் மரக்கன்றுகளை நட்டு வர மரக்கன்றுகளை வழங்கிய ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்
தமிழ்நாடு சுற்றுச்சூழல் & காலநிலை மாற்றத்துறை, திருவண்ணாமலை மாவட்ட காவல் நிலை மாற்ற இயக்கம் மற்றும் திருவண்ணாமலை வனக்கோட்டம் இணைந்து நடத்தும் ஒரு நாள் சிறப்பு கோடைகால இயற்கை முகாமிற்கு இயற்கை சூழல் மிகுந்த ஜவ்வாது மலைக்கு பள்ளி மாணவ – மாணவிகளை அழைத்துச் செல்லும் ஏற்பாடுகள் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
இன்று நடைபெற்ற இந்த முகாமில் அடி அண்ணாமலை கண்ணக்குறிக்கை கலசபாக்கம் போளூர் மேல்பட்டு ஜமுனாமரத்தூர் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவ மாணவிகள் இந்த முகாமில் கலந்து கொண்டு ஜவ்வாது மலைக்கு புறப்பட்டு சென்றனர்.
ஒரு நாள் சிறப்பு கோடைகால இயற்கை முகாமிற்கு இயற்கை சூழல் மிகுந்த ஜவ்வாது மலைக்கு பள்ளி மாணவ – மாணவிகளை அழைத்துச் செல்லும் இலவச பேருந்தை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் குடியரசு துவக்கி வைத்ததுடன் இயற்கை எழில் மிகுந்து உள்ள ஜவ்வாது மலைக்கு செல்லும் மாணவ மாணவிகளிடம் மரக்கன்றுகளை வழங்கி மலைகளில் மரக்கன்றுகளை நட்டு வர அறிவுரை வழங்கினார்.
தமிழ்நாடு அரசின் சார்பில் இலவசமாக செல்லும் மாணவ மாணவிகள் ஜவ்வாது மலையில் உள்ள பீமன் அருவி, சிறுவர் பூங்கா, இயற்கை அழகுடன் கூடிய நடைபயணம், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றல், வனம் மற்றும் வன உயிரினங்கள் சார்ந்த கருத்துக்கள் கேட்டல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.