மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு, மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியில் ஏழு இடங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன பாதுகாப்பு பணியில் 593 காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்
மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மயிலாடுதுறை அடுத்த வண்ணம் பந்தல் ஏவிசி பொறியியல் கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. சீர்காழி மயிலாடுதுறை பூம்புகார் திருவிடைமருதூர் கும்பகோணம் பாபநாசம் ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு பெட்டிகள் தனித்தனி கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ளது. நாளை மறுதினம் வாக்கு எண்ணிக்கை கல்லூரியின் ஆறு பகுதிகளில் தனித்தனியாக எண்ணப்படுகிறது. மேலும் பதிவான தபால் வாக்குகள் தனியாக ஒரு கட்டிடத்தில் பலத்த பாதுகாப்புடன் எண்ணப்படுகிறது.
ஒரு சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் 14 மேசைகள் அமைக்கப்பட்டு அதிகபட்சம் 22 சுற்றுகளும் குறைந்தபட்சம் 19 சுற்றுகளும் எண்ணப்படுகின்றன தபால் வாக்கு எண்ணுவதற்கு ஏழு மேசைகள் அமைக்கப்பட்டுள்ளன இரண்டு சுற்றுகளாக தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன வாக்கு எண்ணிக்கையில் 706 அலுவலர்களும் 111 நுண் பார்வையாளர்களும் காவலர்கள் மற்றும் துணை ராணுவ படையினர் என மொத்தம் 593 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை மையத்தில் தடுப்பு கட்டைகள் அமைத்து குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை முகவர்கள் மற்றும் அரசியல் கட்சி ஏஜென்ட்கள் கல்லூரி வாசலில் பலத்த சோதனைக்குப் பிறகு உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். இந்தப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் திரு மகாபாரதி நேரில் ஆய்வு மேற்கொண்டார் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.