புத்தகத்தை மாணவர்கள் வெளியிட ஆட்சியர்பெற்றுக் கொண்டார்
நாகை அருகே கீழ்வேளூரில் அரசு பள்ளி மாணவர்களின் கலர் பலூன்” சிறார் புத்தக வெளியிட்டு விழா; பள்ளி மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நடைப்பெற்றது; புத்தகத்தை பள்ளி மாணவர்கள் வெளியிட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் பெற்றுக் கொண்டார்
அரசுப்பள்ளி மாணவர்களின் வாசிப்புத்திறன் மற்றும் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் வகையில் தமிழ்நாட்டிலே முதல் முறையாக குருக்கத்தி மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் சார்பில் கலர் பலூன் சிறார் இதழை அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளது.
அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் 1 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை படிக்க கூடிய மாணவ, மாணவிகளின் கதை, ஓவியம், கவிதை, ஜோக் என முழுக்க, முழுக்க மாணவர்களின் கை வண்ணத்தில் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை அச்சிட்டு புத்தகம் வெளி வர இருக்கிறது.
முதல் பதிப்பு வெளியிட்டு விழா கீழ்வேளூர் ப்ரைம் தனியார் கல்லூரியில் நடைப்பெற்றது. புத்தகத்தில் படைப்பாற்றல் செய்த மாணவர்கள் புத்தகத்தை வெளியிட மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் பெற்றுக் கொண்டார்.
படைப்பாற்றலை வெளிப்படுத்திய மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார். தொடர்ந்து ஆட்சியர் பேசும்போது குழந்தைகள் உண்மையாக என்ன எழுதுகிறார்களோ இந்த சமூகம் அதை ஏற்றுக்கொள்கிறதோ இல்லையோ வித்தியாசமாக எதுவாக இருந்தாலும் அதில் இடம்பெற வேண்டும் குறிப்பாக சமுதாயத்திற்கு மாறுபட்ட முறையில் குழந்தைகள் சொல்லுவது அதாவது ஆசிரியர்களுக்கு தோன்றும் அவன் அதிகப்படியாக நடந்து கொள்கிறான் என நினைக்கும் அனைத்தும் இந்த கலர் பலூனில் இடம்பெற வேண்டும் என்பதை என்னுடைய வேண்டுகோள் என தெரிவித்தார்.
தொடர்ந்து மாணவ, மாணவிகளின் ஆடல், பாடல், கதைசொல்லல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. நிகழ்ச்சியில் பால சாகித்ய்யகாடமி விருது பெற்ற எழுத்தாளர் மு.முருகேஷ் பங்கேற்று குழந்தை இலக்கியம் குறித்து உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆட்சியரோடு மாணவ மாணவிகள் செல்பி எடுத்து மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டனர். அரசு பள்ளி மாணவர்களின் வாசிப்புத் தன்மை, படைப்பு தன்மையை ஊக்குவிக்கு முழுக்க முழுக்க பள்ளி மாணவர்களின் படைப்புகளை கொண்டே புத்தகத்தை வெளி கொண்டு வந்துருக்கும் முயற்சிக்கு அனைத்து தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.