கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் பொதுமக்கள் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என கலெக்டர் எச்சரிக்கை
நெல்லை தூத்துக்குடியில் இன்று கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் பொதுமக்கள் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என கலெக்டர் எச்சரிக்கை
திருநெல்வேலி மாவட்டத்தில் காலையில் இருந்து நேற்று மதியம் வரை வெயிலடித்தது மாலை 3 மணிக்கு பிறகு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது பாபநாசம் சேர்வலாறு மணிமுத்தாறு அணைப்பகுதியிலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலும் பரவலாக மழை பெய்தது நெல்லை மாவட்டத்தை பொருத்தவரை பாளையங்கோட்டையில் 3 மில்லி மீட்டர் மலையும் சேரன்மகாதேவியில் இரண்டு மில்லிமீட்டர் மலையும் காக்காச்சி நாலு மூக்கு கூத்து ஆகிய இடங்களில் தலா ஒரு மீட்டர் மலையும் பெய்தது.
இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இன்று புதன்கிழமை நள்ளிரவு வரை திருநெல்வேலி தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை பகுதிகளில் அலையின் சீற்றம் மிக அதிகமாக இருக்கும் ஒவ்வொரு அலையும் 18 முதல் 22 நொடி வரை இருக்கலாம் 1.2 முதல் 2 மீட்டர் உயரம் எழும்பவும் வாய்ப்பு உள்ளது.
எனவே கடற்கரை ஓரம் வசிப்பவர்கள் போதிய முன்னெச்சரிக்கையோடு இருக்க வேண்டும் மீனவர்கள் படகுகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைத்திட வேண்டும் கடற்கரைகளுக்கு பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என எச்சரிக்க படுவதாக கூறியுள்ளார்.
வட தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் மன்னார்க வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 km வேகத்திலும் வீசப்படும்.
எனவே அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தூத்துக்குடி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் விஜயராகவன் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து விசைப்படகு மற்றும் நாட்டு படகு உரிமையாளர் சங்கங்களின் தலைவர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் வங்கக்கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல வேண்டாம் படகுகளை பாதுகாப்பான முறையில் நிறுத்தி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று கூறியுள்ளார்.