in ,

சாத்தூரில் கத்தியை காட்டி மிரட்டி கல்லூரி பேராசிரியர் மற்றும் பெட்ரோல் பங்க உரிமையாளர் மனைவியிடம் 20 பவுன் நகை பறிப்பு

சாத்தூரில் கத்தியை காட்டி மிரட்டி கல்லூரி பேராசிரியர் மற்றும் பெட்ரோல் பங்க உரிமையாளர் மனைவியிடம் 20 பவுன் நகை பறிப்பு சாத்தூர் நகர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மாரியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த பெட்ரோல் பங்க உரிமையாளரான இராதகிருஷ்ணன் மனைவி ராமலட்சுமி(56) இவர் முருகன் கோவில் தெருவில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது பின்னால் வந்த மர்ம நபர்கள் அந்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி 8 பவுன் தங்க செயினை பறித்து சென்றனர்.
இதையடுத்து இந்த மர்ம நபர்கள் சாத்தூர் அருகே சடையம்பட்டி வளர்நகர் பகுதியில் எஸ்.ஆர்.என்.எம்.கல்லூரி பேராசிரியரான ராமலட்சுமி(42) இவர் நடந்து செல்லும் போது அவரிடமும் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி கழுத்திலிருந்த 9 பவுன் செயின்,இரண்டு மோதிரம் 3 பவுன் ஆகியவற்றை பறித்து சென்றனர்.

இவ்விரு சம்பவம் குறித்து தகவலறிந்த சாத்தூர் போலீஸார் செயினை பறித்து சென்ற மர்ம நபர்களை விரட்டி சென்றனர் ஆனால் மர்ம நபர்கள் தப்பி சென்றனர்.மேலும் இதுகுறித்து சாத்தூர் நகர் மற்றும் தாலுகா போலீஸார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில் சாத்தூர்-ஏழாயிரம்பண்ணை சாலையில் உள்ள நாரணாபுரம் விலக்கில் மர்மான முறையில் இருச்சகர வாகனம் நிறுத்தி வைக்கபட்டிருந்தது.
போலீஸார் விசாரணையை தீவிர படுத்தியதில் அந்த இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் நகை திருடி சென்றது உறுதியானது.

மேலும் அந்த இருசக்கர வாகனமும் கரூர் பகுதியில் திருடியிருப்பது தெரியவந்தது எனவே இருசக்கர வானம் நிறுத்தபட்டிருந்த இடத்தில் போலீஸார் மேப்ப நாய் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கபட்டு செயினை பறித்த சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

What do you think?

வெம்பக்கோட்டை அகழாய்வில் அலங்கரிக்கப்பட்ட முழுமையான சங்கு வளையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

திண்டுக்கல் ரெட்டியார்சத்திரத்தில் அமைந்துள்ள கோபிநாத சுவாமி கோயில் கிருஷ்ண ஜெயந்தி விழா வழுக்குமரம் ஏறுதல் மற்றும் உறியடி திருவிழா இன்று நடைபெற்றது.