உலக மண் தினத்தை முன்னிட்டு திருமண ஜோடியினருக்கு விதைப்பந்துகளை பரிசாக வழங்கிய கல்லூரி மாணவ மாணவிகள் – மண்வளம் காக்க மணமேடையில் உறுதிமொழி எடுத்துக் கொண்ட புதுமண ஜோடி.
மண் நம் வாழ்வின் ஒருங்கிணைந்த பகுதிகளில் ஒன்றாகும், அவை நமக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன, உணவுப் பொருட்களின் வளர்ச்சிக்கான முக்கியக் காரணியாக உள்ளன
மேலும் பல்வேறு உயிரினங்களின் தாயகமாகவும் உள்ளன, மண்ணின் தரத்தை பராமரிப்பதும், மண்ணின் தரத்தை உறுதி செய்வதும் ஒவ்வொருவரின் பொறுப்பாகும். மேலும் மண்ணின் தரத்தை பராமரிப்பதன் முக்கியத்துவம் மற்றும் அது நம் வாழ்க்கை மற்றும் உணவு முறையில் எவ்வளவு முக்கியமானது என்பதை மக்களுக்கு அறிவிப்பதை உறுதி செய்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் உலக மண் தினம் டிசம்பர் 5 ம் தேதி கொண்டாடப்படுகிறது.
அத்தகைய பெறுமையுடைய மண் தினமான இன்று
மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் அமெரிக்கன் கல்லூரியில் பயிலக்கூடிய கல்லூரி மாணவி மது பிரியா, ராம்குமார் திருமணம் நடைபெற்றது
இதில் கலந்துகொண்ட அமெரிக்கன் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் உலக மண் தினத்தை முன்னிட்டு புதுமண தம்பதியினருக்கு விதை பந்துகளை பரிசாக வழங்கினர்
முன்னதாக கல்லூரி மாணவ மாணவிகள் ஒன்றிணைந்து திருமண மண்டபத்தில் நுழைவாயில் இருந்து சில்வர் தட்டில் அந்த விதைப்பந்துகளை அடுக்கி வைத்து உறவினர்கள் சீர்வரிசை கொண்டு வருவது போல மணமேடைக்கு வருகை தந்தனர்
விதைகள் முளைத்து மரமாக வளர்வது போல் புதுமணத் தம்பதியினருடைய வாழ்வும் தழைத்து வளர்ந்து வாழ்வில் உயர வேண்டும் என்று விதைப்பந்தை பரிசாக வழங்கினர்.
தொடர்ந்து மண்வளம் காப்போம் என்று புதுமண ஜோடியினரோடு சேர்ந்து கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் மண மேடையிலேயே உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
மேலும் மண்ணின் பெறுமையை அனைவரும் அறிந்து கொள்ளும் விதமாக இன்றைய தினம் விதைப்பந்துகளை மணமக்களுக்கு பரிசாக வழங்கியதன் மூலம் மனதிற்கு மிக்க மகிழ்ச்சி அளிப்பதாகவும், இதன் மூலம் மண் வளத்தை காப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படும் எனவும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பேராசிரியர் மற்றும் மாணவிகள் தெரிவித்தன