கொடியேற்றத்துடன் பத்மாவதி தாயார் கோவில் பிரம்மோற்சவம் துவக்கம்
முதல் வாகன புறப்பாடாக தாயாரின் சின்னசேஷ வாகன புறப்பாடு.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் கார்த்திகை பிரம்மோற்சவம் இன்று மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
கொடியேற்றத்தை முன்னிட்டு கஜ படம் வரையப்பட்ட மஞ்சள் நிற கொடி, சக்கரத்தாழ்வார், சேனை முதல்வன் ஆகிய உற்சவர்களுடன் ஊர்வலமாக மாலை கொண்டு செல்லப்பட்டது.
தொடர்ந்து கோவிலை அடைந்த மஞ்சள் நிற கஜ கொடியை கோவில் அர்ச்சகர்கள் தங்க கொடிமரத்தில் ஏற்றி வைத்தனர்.
கொடியேற்றத்துடன் தாயாரின் கார்த்திகை பிரம்மோற்சவம் கோலாகலமாக துவங்கியது.
இந்த நிலையில் தாயாருக்கு அரசு சார்பில் ஆந்திர அறநிலையத்துறை அமைச்சர் ஆனந்த் ராமநாராயன் ரெட்டி பட்டு வஸ்திரம் சமர்ப்பித்தார்.
தொடர்ந்து இரவு கோவில் மாட வீதிகளில் பிரம்மோற்சவத்தின் முதல் வாகன புறப்பாடாக தாயாரின் சின்ன சேசவாகன புறப்பாடு கோலாகலமாக நடைபெற்றது.