in

சாலையில் சுற்றி திரியும் பன்றிகள் – கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில் ராஜன் எச்சரித்துள்ளார்


Watch – YouTube Click

புதுச்சேரி திருவெண்டார் கோவில் பகுதியில் பன்றிகளை சாலையில் திறியவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன் அபராதம் விதிக்கப்படும் என்று கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில் ராஜன் எச்சரித்துள்ளார்.

புதுச்சேரி மண்ணாடிபட்டு கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சாலையில் பன்றிகள் சுற்றி திரிவதால் பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகி வந்தனர் விபத்துகளும் நடைபெற்றது. மேலும் தொற்றுநோய் ஏற்படும் அபாயமும் இருந்து வந்தது.

இந்த நிலையில் சாலையில் சுற்றி திரியும் பன்றிகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையருக்கு புகார் அளித்தனர்.

அதன் அடிப்படையில் பஞ்சாயத்து ஆணையர் எழில் ராஜன் தலைமையிலான ஊழியர்கள் திருபுவனை, திருவண்டார் கோவில், மதுகடிப்பட்டு,கலிதீர்த்தால் குப்பம், உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் சுற்றித்திரிந்த 10-க்கும் மேற்பட்ட பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்தினர்.

இதுகுறித்து கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில் ராஜன் கூறும் போது….

சாலையில் சுற்றித் திரியும் பன்றிகளால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும் விபத்துக்கள் ஏற்படுவதாகவும் புகார் வந்தது.

அதன் அடிப்படையில் சாலையில் சுற்றித்திரிந்த பன்றிகளை அப்புறப்படுத்தியுள்ளோம். மேலும் பன்றி வளர்ப்பவர்கள் பன்றிகளை பட்டியில் மட்டுமே வளர்க்க வேண்டும் சாலையில் திரிய விட்டால் கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன் அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படும் என்று எச்சரித்தார்.


Watch – YouTube Click

What do you think?

நடிகர் விஜய் நடிக்கும் கோட் திரைப்பட காட்சிகள் நள்ளிரவில் எடுக்கப்பட்டது

வருவாய் நீதிபதியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி விவசாயிகள் முற்றுகை போராட்டம்