in

மாவட்ட ஆட்சியர் மகாபாரதியை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

மாவட்ட ஆட்சியர் மகாபாரதியை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

 

குழந்தைக்கு எதிரான பாலியல் குற்றம் குறித்து தவறான கருத்து தெரிவித்த மயிலாடுதுறை முன்னாள் மாவட்ட ஆட்சியர் மகாபாரதியை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

சமீபத்தில் சீர்காழி அருகே நடைபெற்ற மூன்றரை வயது குழந்தைக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றத்தில் குழந்தையின் மீதும் தவறு உள்ளது என்று நேற்று மாவட்ட ஆட்சியராக இருந்த மகாபாரதி கருத்து தெரிவித்தார்.

இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினர் இடையே பலத்த எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், ஒரே நாளில் மாவட்ட ஆட்சியர் மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் இந்த நாளில் பொறுப்புள்ள அதிகாரியாக இருக்க வேண்டிய மாவட்ட ஆட்சியர் தவறான கருத்து தெரிவித்திருப்பதாக கண்டனம் தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மயிலாடுதுறையில் கிட்டப்பா அங்காடி அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்சியின் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட ஆட்சியராக இருந்த மகாபாரதியை கண்டித்து அக்கட்சி நிர்வாகிகள் கோஷங்கள் எழுப்பினர்.

தமிழக அரசு அதிகாரிகள் மக்கள் நலன் முக்கியம் என்று செயல்பட அறிவுறுத்த வேண்டுமென்று அப்போது அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

What do you think?

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவப்படத்தையும்‌ நலத்திட்டங்களையும் ரங்கோலியாக அசத்தல்

தமிழக முதலமைச்சர் அவருக்கு வண்ணக்கோலமிட்டு வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்த பொதுமக்கள்