திருவெறும்பூர் அருகே துவாக்குடியில் மதிமுக வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பொழுது வேட்பாளர் கலந்து கொள்ளாததால் கூட்டணி கட்சியினர் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியது
இந்தியா கூட்டணி ஜனநாயக கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கூட்டணி கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனை அடுத்து திருச்சி பாராளுமன்ற திமுக கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமை வகித்தார் துவாக்குடி நகராட்சி சேர்மன் இ காயம்பு, மதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி முகமது அலி, விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேசுகையில் மோடி சிறந்த நாடக நடிகர் மக்களுக்கு தேவையான எந்த வசதியும் அவர் செய்து கொடுக்கவில்லை. சாமானிய மக்கள் வாங்கும் கடன், விவசாய கடன் கல்விக் கடன் சிறு குறு தொழில்களுக்கு வாங்கும் கடன் ஆகியவற்றை மக்களிடம் கட்டாய வசூல் செய்ய தீவிரம் காட்டுகிறார்.
ஆனால் பல லட்சம் கோடி கடன்களை வாங்கிக் கொண்டு வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்லும் தொழிலதிபரிடம் இருந்து கடனை வசூல் செய்யாமல் அதனை தள்ளுபடி செய்கிறார். நாட்டில் உள்ள அனைத்து குடும்பங்களும் அவரது குடும்பம் என்று பீற்றிக்கொள்கிறார். ஆனால் சொந்த மனைவியை வைத்து காப்பாற்றாத நபர் எப்படி நாட்டு மக்களை காப்பாற்ற முடியும். தற்பொழுது நடைபெறும் ஜனநாயகத் தேர்தல் இந்திய தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படுகிறது என்றாலும் அது சுதந்திரமாக நடத்தப்படுகிறதா என்றால் சந்தேகத்தை தான் ஏற்படுத்துகிறது. ஏனென்றால் அவர்கள் கட்சியினர்களுக்கு பாரபட்சமாக தான் தேர்தல் சின்னங்களே ஒதுக்கினார்கள் இதனை யாரும் மறுக்க முடியாது.
பாஜக கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு கேட்ட சின்னங்களை உடனே ஒதுக்கி கொடுக்கவும் அதே வேளையில் எதிர்க்கட்சியில் கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு அவர்கள் சின்னங்கள் முறையாக ஒதுக்கப்படாமல் வேற சின்னங்கள் வழங்கப்பட்டதை உதாரணமாக சொல்லலாம். ஆகவே பாசிச கொள்கை கொண்ட பாஜகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். இந்தியா கூட்டணி வேட்பாளரான திருச்சி பாராளுமன்றத்திற்கு போட்டியிடும் துரை வைகோவிற்கு தீப்பட்டி சின்னத்திற்கு வாக்களித்து பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய அனைவரும் உறுதுணையாக உழைக்க வேண்டும் வீடுகள் தோறும் பயன்படுத்தும் ஒரே பொருள் என்றால் அது தீப்பெட்டி தான் ஆகவே மக்கள் யாரும் தீப்பெட்டியை சாதாரணமாக மறந்து விடக்கூடாது அதற்கு பெருவாரியான வாக்குகள் அளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் திமுக மதிமுக விடுதலை சிறுத்தைகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கூட்டணி கட்சி வேட்பாளரை ஆதரித்து கூட்டணி கட்சி மாநில செயலாளர் வந்து வாக்கு சேகரிக்கும் பொழுது வேட்பாளர் கலந்து கொள்ளாததால் கூட்டணி கட்சியினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது
இந்த பரப்புரைக்கு முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இசைக் குழுவினர் பாரதிய ஜனதா ஆட்சியை விமர்சித்து பாடல் பாடியினார் இதற்கு கட்சியினரால் அழைத்துவரப்பட்ட பெண்கள் நடனம் ஆடியது சுவாரசியமாக இருந்தது
அதேபோல் முத்தரசன் பரப்புரை ஆற்றி முடித்தவுடன் டாட்டா ஏசி வாகனத்தில் வைத்து மோர் அனைவருக்கும் விநியோகம் செய்யப்பட்டது இந்த சுட்டெரிக்கும் வெயிலில் தாகம் தீர்க்க மோர் வழங்கியது ஒரு நல்ல விஷயமே