புதிய பேருந்து நிலையம் செல்லூர் கிராமத்திற்கு இடமாற்றம் செய்வதற்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு
நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையம் செல்லூர் கிராமத்திற்கு இடமாற்றம் செய்வதற்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு: புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அவரித்திடலை விரிவாக்க பணிக்காக பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க கோரிக்கை மனு.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் புதிய பேருந்து நிலையம் அவரிதிடல் அருகே செயல்பட்ட வருகிறது இங்கு அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் அதன் விரிவாக்க பணிக்காக நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகம் சார்பில் காரைக்கால் திருத்துறைப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலை அருகே செல்லூர் கிராமத்திற்கு இடமாற்றம் செய்வதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்ற வருகிறது. சுமார் 30 கோடி மதிப்பீட்டில் பணிகள் தொடங்கப்பட உள்ளது.
அதற்கான இடத்தினை நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் அண்மையில் ஆய்வு மேற்கொண்டார். இந்த நிலையில் நாகப்பட்டினம் மையப் பகுதியில் இயங்கும் புதிய பேருந்து நிலையத்தை இடம் மாற்றம் செய்தால் வணிகர்கள் மற்றும் சிறு குறு வியாபாரிகள் பெரிதளவு பாதிப்பு அடைவார்கள் என்பதால் புதிய பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்யாமல் அருகில் உள்ள அவுரி திடலை விரிவாக்க பணிக்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என நாகப்பட்டினம் கோட்டாட்சியர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் சமூக ஆர்வலர்கள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.