in

மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சி..யை பார்க்காத ரசிகருக்கு நஷ்ட ஈடு

மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சி..யை பார்க்காத ரசிகருக்கு நஷ்ட ஈடு
மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சி..யை பார்க்காத ரசிகருக்கு நஷ்ட ஈடு கொடுக்க உத்தரவிட்ட நுகர்வோர் ஆணையம்
ஏ.ஆர்.ரகுமான் கடந்த ஆண்டு மறக்குமா நெஞ்சம் என்ற பெயரில் இசை நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்தார்.
மழையின் காரணமாக நிகழ்ச்சி தடைப்பட்டடு திரும்பவும் அந்நிகழ்ச்சி செப்டம்பர் பத்தாம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சி சென்னை ஆதித்யா ராம் பேலஸ் சிட்டியில் நடைபெற்ற போது ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர்.
2000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட நிலையில் கூடுதலான ரசிகர்கள் திரண்டதால் கூட்ட நெரிச்சல் காரணமாக ஏக போக பிரச்சனை ஏர்பட்டது.
இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஏசிடிசி நிறுவனம் திட்டமிட்டு செயல்படாததால் டிக்கெட் வாங்கிய சுமார் 4000 பேருக்கு பணம் திருப்பி வழங்கப்பட்டது .
அஸ்வின் மணிகண்டன் என்பவர் கரூரில் இருந்து நிகழ்ச்சியை காண வந்தவர் இடம்  கிடைக்காமல் திரும்பி சென்றதால் ஏசிடிசி நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்தார் .
டிக்கெட்டின் விலை 12 ஆயிரம் வந்து போனதற்கான செலவு 5,000 , ரூ.50,000 இழப்பிடு தொகை என்று மொத்தம் 67,000 வழங்கப்படும் வேண்டுமென்று வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் ஆணையம் டிக்கெட் தொகையுடன் 67 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடாக அஸ்வின் மணிகண்டனுக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

What do you think?

ஆயுதங்களுடன் நான்கு நபர்கள் கைது கியூ பிரிவு, காவல் துறையினர் விசாரணை

தென்னிந்திய குயின்…னுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்