தனுஷ் நடிக்கவிருக்கும் டிஎன்எஸ் தயாரிப்பாளர்கள் மீது புகார் ..படப்பிடிப்பு ரத்து
சமீபத்தில் வெளியான தனுஷ்..யின் கேப்டன் மில்லரின் வெற்றியை தொடர்ந்து அவர், DNS என்ற தனது அடுத்த படத்திற்கான படப்பிடிப்பை ஏற்கனவே தொடங்கியுள்ளார்.
இப்படத்தின் பட பிடிப்பு சமீபத்தில் திருப்பதியில் நடந்தது, ஆனால், படப்பிடிப்பால் பக்தர்களுக்கும், போக்குவரத்து நெரிசலுக்கும் இடையூறு ஏற்படுவதாக படக்குழு மீது புகார் அளிக்கப்பட்டது.
இதனால் படப்பிடிப்பிற்கான அனுமதியை அதிகாரிகள் ரத்து செய்துள்ளனர். சேகர் கம்முலா இயக்கும் இப்படம் சமீபத்தில் பூஜையுடன் தொடங்க பட்ட நிலையில், திருப்பதி மலைப்பிரதேசத்தில் படப்பிடிப்பு மீண்டும் தொடருமா அல்லது தயாரிப்பாளர்கள் இடத்தை மாற்றுவார்களா என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள்.
அப்பகுதியில் ஆம்புலன்ஸ்கள் செல்வதற்கு கூட இடையூறு ஏற்படுத்தி, போக்குவரத்து நெரிசல் காரணமாக படத்திற்கு வழங்கப்பட்ட படப்பிடிப்பு அனுமதியை திருப்பதி போலீசார் ரத்து செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள அல்பிரி பகுதியில் படப்பிடிப்பு தொடங்கியதால் மற்ற வாகனங்கள் வெவ்வேறு வழிகளில் திருப்பி விடப்பட்டன, இதனால் குறிப்பிட்ட பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது, அதற்கு மேல் திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவில் அருகே படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருப்பது விமர்சனத்தை ஏற்படுத்தியது, இறுதியில், புகார்களின் அடிபடையில் படப்பிடிப்பு அனுமதிகள் ரத்து செய்யப்பட்டன.
தனுஷ் மற்றும் தெலுங்கு நட்சத்திரம் நாகார்ஜுனாவை இணைத்து பெரிய பட்ஜெட்டில் இப்படம் உருவாகியுள்ளதால், ஷூட்டிங் ரத்து இப்படத்திற்கு பின்னடைவை ஏற்படுத்திவிட்டது.
இப்படத்திற்கு தாராவி என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும், நாகார்ஜுனா கேங்ஸ்டர் வேடத்தில் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், தயாரிப்பாளர்கள் இன்னும் இப்படத்தினை பற்றிய தகவல்களை வெளியிடவில்லை.
இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. தனுஷ் மற்றும் நாகார்ஜுனா தவிர, ராஷ்மிகா மந்தனா மற்றும் ஜிம் சர்ப் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கஉள்ளனர், படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.