in

மங்களம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடு புகார்


Watch – YouTube Click

முசிறி அருகே மங்களம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடு புகார் கூறி செயலரை மாற்ற கோரி பொதுமக்கள் தர்ணா போராட்டம்

திருச்சி மாவட்டம், முசிறி அருகே மங்களம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இதன் மூலம் மங்களம், மங்களம் புதூர், வெள்ளாளப்பட்டி, கஸ்தூரிபட்டி, தெற்குமேடு, மாவலிபட்டி, கிருஷ்ணாபுரம் பகுதி பொதுமக்கள் கடன் பெற்று பயன் பெறுவார்கள்.

இந்த வங்கியின் செயலாளராக கடந்த மூன்று மாதங்களாக கொத்தம்பட்டியை சேர்ந்த செல்வமலர் என்பவர் பணிபுரிந்து வருகிறார். செல்வமலர் விவசாயிகளை தரக்குறைவாக பேசுவதாகவும், நகைக்கடன்களை மாற்றி வைக்க வருபவர்களிடம் கூடுதலாக பணம்வசூல் செய்வதாகவும், மானியம் தள்ளுபடி கடன்களுக்கு மானியத்தை தர மறுப்பதாகவும், கணக்கு முடிந்த கடன்களுக்கு கடன் நிலுவை இல்லை என்ற சான்று தர மறுப்பதாகவும், பொதுமக்கள் குற்றம் சாட்டி செயலாளரை மாற்றக்கோரி கூட்டுறவு கடன் சங்கம் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த முசிறி கூட்டுறவு சார் பதிவாளர் அலுவலக கண்காணிப்பாளர் குணசேகரன் நேரில் சென்று கணக்கு வழக்குகளை ஆய்வு செய்து கடன் பெற்ற சங்க உறுப்பினர்களை வரவழைத்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர் . இதனால் மங்களம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலக வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.


Watch – YouTube Click

What do you think?

வெற்றிக்கு காரணமான நரேந்திர மோடியே தோல்விக்கும் காரணம் விசிக எம்பி ரவிக்குமார்

முசிறியில் பூட்டிய வீட்டில் 13 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் திருட்டு