in

நிலத்தை அபகரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் புகார்


Watch – YouTube Click

நிலத்தை அபகரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் புகார்

 

நிலத்தை அபகரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு தாய் தந்தை மற்றும் மகள் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே உள்ள ஆலந்தூரன்பட்டியைச் சேர்ந்த முத்துச்சாமி மனைவி பொன்னம்மாள் மகள் காளீஸ்வரி. இவர்களுக்கு 1.25 சென்ட் இடம் உள்ளது‌.

அந்த இடத்தை அவரது உறவினர்கள் அபகரிக்க முயல்வதாக கூறி கடந்த மாதம் கன்னிவாடி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்திருந்தனர். மேலும் தங்களது இடத்தை அளப்பதற்கு நில அளவரிடம் பணம் கட்டியும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் வேதனை அடைந்த முத்துசாமி குடும்பத்துடன் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி தண்ணீர் ஊற்றி காப்பாற்றினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து முத்துசாமி தெரிவித்ததாவது: ஆலந்தூரான்பட்டியில் எனக்கு சொந்தமான இடம் உள்ளது. அந்த இடத்தை எனது எதிர் வீட்டில் உள்ள உறவினர்கள் அபகரிக்க முயல்கின்றனர்.

இது குறித்து நான் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, ஆதலால் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கூறி நான் குடும்பத்துடன் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்ய முயன்றேன் என அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து தாடிக்கொம்பு போலீசார் அவர்களை போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் சென்றனர்.


Watch – YouTube Click

What do you think?

மங்கைநல்லூரில் நடைபெற்ற முதல்வரின் மக்கள் முகாம் நிகழ்ச்சி குறித்து மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

சாலை வசதி கோரி 150-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு