in

சிக்கன் ஃபிரைடு ரைஸில் புழு இருந்தாக வாங்கி சாப்பிட்ட மாணவர்கள் புகார்

சிக்கன் ஃபிரைடு ரைஸில் புழு இருந்தாக வாங்கி சாப்பிட்ட மாணவர்கள் புகார்

 

ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற பேக்கரியில் சிக்கன் ஃபிரைடு ரைஸில் புழு இருந்தாக வாங்கி சாப்பிட்ட மாணவர்கள் புகார்..

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் அருகே கிங்ஸ் பேக்கரி மிகவும் பிரசித்தி பெற்று இயங்கி வருகிறது .

இந்த பேக்கரியில் ஒட்டன்சத்திரம் நகரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் சிறியவர் முதல் பெரியவர் வரை டீ குடிப்பதும் ஸ்னாக்ஸ் சாப்பிடுவதும் துரித உணவுகளை உண்பதும் வழக்கமாக உள்ளது.

இந்நிலையில் இன்று மாலை ஒட்டன்சத்திரம் சோதனைச் சாவடி அருகே உள்ள கிறிஸ்தவ பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் சுமார் ஐந்து பேர் இந்த கிங்ஸ் பேக்கரியில் வந்து துரித உணவான சிக்கன் ஃபிரைட் ரைஸ் வாங்கி உண்ட போது அந்த உணவிலிருந்து கெட்ட துர்நாற்றம் வீசி உள்ளது.
இதைக் கண்ட அந்த மாணவர்கள் பேக்கரியின் நிர்வாகத்திடம் இந்த சிக்கன் ஃபிரைட் ரைஸ்சில் துர்நாற்றம் வீசுவதாக கூறியுள்ளனர்

அதற்கு அந்த நிர்வாகம் இது நம்ம கடை இதைப்பற்றி நீங்கள் ஒன்றும் கண்டு கொள்ள வேண்டாம் நீங்கள் இதற்கு பில் தர வேண்டாம் என்று கூறியுள்ளனர் .

நீங்கள் ஏற்கனவே அருந்திய டீ மற்றும் ஸ்நாக்ஸ்க்கு மட்டும் பில் கொடுங்கள் இந்த சிக்கன் ஃபிரைட் ரைஸ்க்கு பில் தர வேண்டாம் என்று சொல்லி உள்ளனர்.

இதனை அறிந்த அந்த மாணவர்கள் அந்த சிக்கன் ஃபிரைட் ரைஸில் இருந்த சிக்கனை பிரித்து பார்த்தபோது அந்த சிக்கனிலிருந்து வெள்ளை புழு வெளியே வந்துள்ளது இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த மாணவர்கள் பல்வேறு இடங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து உணவு பாதுகாப்பு துறை மற்றும் மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மாணவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

What do you think?

தடை செய்யப்பட்ட ரூபாய் 7 லட்சம் மதிப்பிலான 12 ஆயிரம் லாட்டரி டிக்கெட்டுகள் பறிமுதல்

அல்லு மீது மீண்டும் போலீஸ்…இல் புகார்