வலுக்கும் கண்டனம் … ஸ்ரீ தேஜை ..பார்க்க மருத்துவமனைக்கு ஓடிய அல்லு தந்தை
சந்தியா தியேட்டர் சம்பவத்தில் காயமடைந்த சிறுவனைச் சந்திக்க அல்லு அரவிந்த் ஹைதராபாத் மருத்துவமனைக்குச் சென்றார்.
டிசம்பர் 4ஆம் தேதி புஷ்பா 2 படத்தின் பிரீமியர் காட்சியின் போது ஏற்பட்ட நெரிசலில் ரேவதி உயிரிழந்ததுடன் அவரது ஒன்பது வயது மகன் படுகாயமடைந்துள்ளார். டிசம்பர் 4 முதல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தையின் உடல்நிலையை அறிய தெலுங்கானா சுகாதாரத்துறை செயலாளர் கிறிஸ்டினா இசட் சோங்து மற்றும் ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் சி.ஆனந்த் ஆகியோரும் உடன் அல்லுவின் தந்தை மற்றும் தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் காரு சென்றார்.
அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகளிடமிருந்து தேவையான அனைத்து அனுமதிகளையும் பெற்ற பிறகு ஸ்ரீ தேஜை மருத்துவமனைக்குச் சென்று சந்தித்தார். கடந்த 10 நாட்களில் ஸ்ரீ தேஜ் கணிசமான முன்னேற்றம் அடைந்துள்ளதாக அவர் கூறினார். (அப்படின்னு….அவர் தான் சொல்றாரு… துரதிஷ்டவசமாக Sri Tej மூளை சிதைவு அடைந்திருக்கிறார்.)
பலரின் எதிர்ப்புகளுக்கு பிறகு தற்போது குழந்தையை பார்க்க சென்றவர் வழக்கு தொடர்பான சட்டக் கட்டுப்பாடுகள் காரணமாக, அல்லு அர்ஜுனால் குழந்தை மற்றும் அவரது குடும்பத்தினரை சந்திக்க முடியவில்லை என்றும் குறிப்பிட்டார்.
குழந்தை..யின் மருத்துவத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் நாங்கள் செய்ய தயாராக இருக்கிரோம் என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக திரையரங்கின் உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது, 10 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு திரையரங்கு நிர்வாகதிற்கு ஹைதராபாத் காவல்துறை. Showcause Notice அனுப்பியுள்ளது.