தீயணைப்பு வீரர்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்களுக்கான வருடாந்திர ஆய்வு மற்றும் பயிற்சி நடைபெற்றது
திருச்சி மாநகரத்திற்கு உட்பட்ட தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் கண்ட்ரோல்மென்ட் தீயணைப்பு நிலையத்திற்கு உட்பட்ட 65 தீயணைப்பு வீரர்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்களுக்கான வருடாந்திர ஆய்வு மற்றும் பயிற்சி இன்று வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் உள்ள 11 தீயணைப்பு நிலையங்களில் இந்த பயிற்சி நடைபெற்று வருகிறது.
இதில் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து பல்வேறு பயிற்சிகளில் ஈடுபட்டனர். அதில் உடற்பயிற்சி, அணி பயிற்சி, ஏணி பயிற்சி, தண்ணீர் அடிக்கும் பயிற்சி, மூச்சு கருவி பயிற்சி, 23 வகையான முடிச்சுகள் போடும் பயிற்சி, முதல் உதவி பயிற்சி, சீருடை ஆய்வு உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் இன்று நடைபெற்றது.
வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் இந்த ஆய்வு மற்றும் பயிற்சியின் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறை அலுவலர் ஜெகதீசன் தலைமையில் இந்த ஆய்வு மற்றும் பயிற்சிகள் நடைபெற்றது. இதில் உதவி மாவட்ட அலுவலர் சத்யவர்தன் உள்ளிட்ட தீயணைப்பு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த ஆய்வின் நோக்கம் தீயணைப்பு படையில் பணியாற்றக்கூடிய வீரர்கள் சரியான பயிற்சிகளை மேற்கொள்கின்றனர் அதேபோல் அவர்களுக்கான சீருடைகள் அவர்கள் பயன்படுத்தக்கூடிய முதல் நிலை உபகரணங்கள் ஆகியவைகள் சரியாக பராமரிக்கப்படுகிறதா? வீரர்கள் ஏற்கனவே எடுத்துக்கொண்ட பயிற்சிகள் அவர்களுக்கு போதுமானதாக இருந்ததா தற்போது நடத்தப்படும் இந்த பயிற்சியில் வீரர்கள் சரியாக பயிற்சி செய்யவில்லை என்றால் அவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.