in

பயணிகளைக் கவரும் வண்ணம் நூதன முறையை கையாண்டுள்ள நடத்துனர் – பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு

பயணிகளைக் கவரும் வண்ணம் நூதன முறையை கையாண்டுள்ள நடத்துனர் – பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு

 

எப்போதும் பரபரப்பாக காணப்படும் மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையம்

இந்த பேருந்து நிலையத்திலிருந்து திண்டுக்கல், சேலம், கோவை,பொள்ளாச்சி, தேனி உள்ளிட்ட பல்வேறு பெரு நகரங்களுக்கு பேருந்து சேவை இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பேருந்திலே பயணம் செய்யும் வாடிக்கையாளர்களை குறிப்பாக பயணிகளை கவரும் வண்ணமும், தங்களுடைய வழித்தடத்தில் செல்லக்கூடிய பயணிகளுக்கு எளிதில் அவர்களது காதில் கேட்கும்படியும் நடத்துனர் ஒருவர் நூதனமான ஒரு முறையை கையாண்டுள்ளார்.

சாதாரணமாக தற்போது சாலையோர வியாபாரிகள் கூட பேட்டரி பொருத்தப்பட்ட மைக்குகள் வைத்து அதில் அவர்களுடைய வியாபார பொருட்களை விற்பனை செய்து வரக்கூடிய நிலையில் இதைப் பார்த்த நடத்துனர் அதேபோன்ற ஒரு பேட்டரியால் இயங்கப்படக்கூடிய ஒரு கூம்பு வடிவ குழாய் ஒன்றை வாங்கி பேருந்து கிளம்புவதற்கு முன் அதை பேருந்தின் முன்பக்கம் பொருத்தி ஆன் செய்துவிட

பேருந்து செல்லக்கூடிய வழித்தடங்கள் ஆன பொள்ளாச்சி பொள்ளாச்சி பொள்ளாச்சி என்று தொடர்ந்து அது ஒலிக்க தொடங்குகிறது.

படிப்பறிவு இல்லாத பாமர மக்கள் முதல், அந்த வழித்தடத்தை பயன்படுத்த உள்ள பயணிகள் வரை அனைவருடைய காதுகளுக்கும் எட்டி தாங்கள் செல்ல வேண்டிய பேருந்து நிற்கக்கூடிய இடத்தை மிக எளிதாக கண்டறிந்து பயணிகள் பேருந்து ஏறுகின்றனர்.

குறிப்பு. ஊர்ல இருக்க விஞ்ஞானி எல்லாம் வேறு எங்கேயும் இல்ல நம்ம ஊர்ல தான் இருக்காங்க..என்பது போல் இந்த நடத்துனரின் செயல் உண்மையில் பாராட்டுதலுக்குரியது.

What do you think?

நடத்துனரின் கனிவான பேச்சு ஆச்சரியப்படும் பேருந்து பயணிகள்

குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்