காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியலிங்கம் தீவிர பரப்புரை. பெண்கள் பூசணிக்காய் சுற்றி உற்சாக வரவேற்பு.
புதுச்சேரி இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் போட்டியிடுகிறார். இவர் புதுச்சேரி முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட வருகிறார் இவருக்கு ஆதரவாக இந்திய கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு கை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்து வருகின்றனர்..
இந்த நிலையில் லாஸ்பேட்டை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன் தலைமையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். லாஸ்பேட்டை உழவர் சந்தை பகுதியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பெண்கள் பூசணிக்காயை சுற்றி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து பிரச்சாரத்தில் பேசிய வேட்பாளர் வைத்திலிங்கம் காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதியில் மகளிர்களுக்கு வருடத்திற்கு ஒரு லட்ச ரூபாய், வேலைவாய்ப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, ரேஷன் கடை திறக்கப்படும், மின் துறையை தனியார் மையம் ஆக்குவது தடுக்கப்படும் என பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்து கை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார்.
மேடை பேச்சு… வைத்திலிங்கம்….
அதனைத் தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேசுகையில் லாஸ்பேட்டை தொகுதியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் உரிய இடத்தை காங்கிரஸ் கட்சி கொடுக்கும் என கூறியிருந்தது அது தற்போது சட்டமன்ற கட்சித் தலைவர் பதவியும் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியிடம் நெருங்கி தங்கள் கருத்துகளை கூறுவதற்கான இடத்தையும் காங்கிரஸ் கட்சி கொடுத்துள்ளது. மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தால் வைத்திலிங்கம் மத்திய அமைச்சராக வருவார் எனவும் வாக்குறுதிகளை கொடுத்தார்…