காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் மற்றும் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பிரச்சாரம்
புதுச்சேரி பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் புதுச்சேரி மாநிலம் முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில் மண்ணாடிப்பட்டு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அவருடன் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, கூட்டணி கட்சி தலைவர்கள. கலந்துகொண்டு வாக்கு சேகரித்தனர்.
அப்போது பேசிய அவர், இப்பொழுதுள்ள ஆட்சியாளர்கள் 100 நாள் வேலை வழங்குகிறார்களா என்று கேள்வி கேட்டபோது, 5 நாள் கூட வழங்குவதில்லை என அங்கு கூடியிருந்த அனைத்து பெண்கள் கூறினர்.
இதனையடுத்து பேசிய வைத்திலிங்கம், 100 வேலை திட்னத்தில் நாள் ஒன்றுக்கு வழங்கப்பட்டு வரும் ரூ.300 ஊதியம், நாங்கள் வந்த பிறகு ரூ.400 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும், 100 நாளும் வேலை வழங்கப்படும் என உறுதியளித்தார்.
மேலும், மகளிருக்கு வருடத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும், காங்கிரஸ் அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் வருடத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்குவோம்.
ஆட்சிக்கு வந்த 2 மாதத்தில் 30 லட்சம் பேருக்கு வேலை கொடுப்போம். அதில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்குவோம் என்றார். மேலும் முதலமைச்சர் ரங்கசாமி பிரச்சாரம் செய்ய இங்கு வரும் போது ரேஷன் கடை திறப்போம் என்று கூறினால், நீங்கள் சாமி சத்தியம் செய்து கொடுக்க சொல்லுங்கள், சத்தியமா திறப்பீர்களா என அவரிடம் கேளுங்கள் என பேசினார்.
அவரை தொடர்ந்து பேசிய முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரியில் காவல்துறை சீர்கெட்டு போனதிற்கு உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தான் காரணம் என்றும், இங்கு வெற்றிபெற்றால் உங்களோடு இருப்பேன் என கூறிவிட்டு இப்பொழுது உங்களுடன் இருப்பதில்லை. எனவே இந்த மண்ணாடிப்பட்டு தொகுதியில் நமச்சிவாயம் டெப்பாசிட் கிடைக்காத அளவிற்கு மக்களாகிய நீங்கள் பாடம் புகட்ட வேண்டும் என்றார்.