கரூரில் இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி வேட்பு மனு தாக்கல் செய்தார். இவருடன், அமைச்சர்கள் சக்கரபாணி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டனர்.
வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு வேட்பாளர் ஜோதிமணி செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழகம் முழுவதும் அதிமுக பிஜேபியின் பி டீமாக செயல்பட்டு வருகிறது.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நான், தொகுதி மக்களுக்காக ரூ.500 கோடி நிதியில் திட்ட பணிகள் செய்துள்ளேன்.
மக்களவையில் கடந்த 70 ஆண்டுகளாக ஒலிக்காத குரலாக தமிழக மக்கள் பிரச்சனை குறித்து குரல் எழுப்பி உள்ளேன்.
தமிழக முதல்வர் தமிழ்நாட்டிற்கு பல்வேறு திட்டங்கள் கொண்டு செய்துள்ளார். குறிப்பாக கல்விக்கும், மருத்துவத்திற்கும், பெண்கள் முன்னேற்றத்திற்கும் மகத்தான திட்டங்களை செயல்படுத்தியுள்ளார் இதனால் தேர்தல் பிரச்சாரத்தின் போது அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல எழுச்சி மற்றும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி நடத்தி வந்த ஒன்றிய பாஜக அரசு தமிழக மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.
தமிழகத்தில் பிஜேபியின் அடிமையாக பி டீமாக இருந்து வந்த அதிமுக கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் தமிழக மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.
அதிமுக இனி எப்போதும் அடிமையாக இருக்கும் என்றார்.
கரூர் மாவட்டத்தில் செந்தில்பாலாஜி அமைச்சராக இருந்தபோது கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி, மணப்பறை ஆகிய 3 தொகுதிகளில் அரசு கலைக்கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளது. கரூரில், வேளாண்மை கல்லூரி கொண்டு வரப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், விசைத்தறி தொழிலாளர்களுக்கு மின் கட்டணம் சலுகை என அறிவித்தனர்.
அமைச்சர்கள் கே என் நேரு, அர. சக்கரபாணி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஐ. பெரியசாமி என ஐந்து அமைச்சர்கள் கரூர் மக்களவைத் தொகுதிக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்துள்ளனர்.
இதை மக்களிடம் சொல்லி ஓட்டு கேட்போம். ஆனால், அதிமுக 10 ஆண்டு தொடர்ந்து எம்பியாக இருந்தும் தொகுதி எம்பிக்கு எந்த அலுவலகம் கிடையாது. அவரை நேரில் சந்திக்க முடியாது. தொகுதி மக்களுக்கு அவர்கள் எதுவும் செய்யவும் இல்லை.
கடந்த 10 ஆண்டுகளில் தமிழக மக்களையும் கரூர் தொகுதி மக்களையும் சீரழிவு பாதைக்கு கொண்டு சென்று விட்டனர் என குற்றம் சாட்டிய ஜோதிமணி
2024 மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்றார்.