in

காங்கிரஸ் – சமாஜ்வாதி தொகுதி பங்கீடு


Watch – YouTube Click

காங்கிரஸ் – சமாஜ்வாதி தொகுதி பங்கீடு

உத்தரபிரதேச மாநிலத்தில் இந்தியா கூட்டணி கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்ததாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று காலை அகிலேஷுடன் தொலைபேசியில் தொடர்புக்கொடு பேசியதை தொடர்ந்து, இரு கட்சிகள் இடையே தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு எட்டியதாக கூறப்படுகிறது.

இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய அகிலேஷ் யாதவ், வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் – சமாஜ்வாதி இடையேயான கூட்டணி, தொகுதி பங்கீடு சுமுகமாக முடிந்ததாக அறிவித்தார். உத்தரபிரதேசத்தில் பாஜக விரட்டி அடிக்கப்படும் என சபதம் எடுத்த அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியுடன் எந்த கருத்து வேறுபாடும் இல்லை எனவும் விளக்கமளித்தார்.

மேலும் கூறியதாவது, சண்டிகரில் பாஜக செய்த தில்லுமுல்லு போல் இதுவரை யாரும் செய்ததில்லை. பாஜக செய்த தில்லுமுல்லு செயல்களை உச்சநீதிமன்றமே உறுதி செய்துள்ளது எனவும் கூறினார். இதனிடையே, உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 17 தொகுதிகளை சமாஜ்வாதி கட்சி ஒதுக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. ரேபரேலி, அமேதி உள்ளிட்ட தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் குறிப்பாக பிரதமர் மோடி போட்டியிடக்கூடும் என சொல்லப்படும் வாரணாசி தொகுதியையும் சமஜ்வாதியிடம் காங்கிரஸ் கேட்டு பெற்றதாகவும் கூறப்படுகிறது. இதுபோன்று, உபியில் மொத்தம் உள்ள 80 மக்களவை தொகுதிகளில் சமாஜ்வாதி கட்சி 62 இடங்களில் போட்டியிடும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சந்திர சேகர் ஆசாத் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.


Watch – YouTube Click

What do you think?

பாகிஸ்தான் பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் தேர்வு

மலர் சீரியல் ரீல் ஜோடிக்கு திருமணம் நடைபெற்றது..