புதுச்சேரி…பாராளுமன்ற தேர்தலில் பாஜக 400 இடங்களை பெறும் என்பது இந்தியா கூட்டணியின் எண்ணாக மாறும் என திருவள்ளுவர் எம் பியும் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் செயல் தலைவர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்…
புதுச்சேரி மக்களவை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரான வைத்திலிங்கத்தை ஆதரித்து திருவள்ளுவர் எம் பியும் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் செயல் தலைவர் ஜெயக்குமார்,செயலாளர் கன்னியப்பன்,வாலாஜாபாத் வட்டாரத் தலைவர் கந்தவேலு,ஆவடி மாநகர் மாவட்ட செயலாளர் ராம்குமார் ஆகியோர் இன்று மாலை வாக்கு சேகரிப்பு ஈடுபட்டனர்.அப்போது பேசிய எம்பி ஜெயக்குமார், தப்பி தவறி பாஜகவுக்கு வாக்களித்தால் மீண்டும் நரேந்திர மோடி பிரதமனார் இதுதான் கடைசி தேர்தலாக இருக்கும் என்றார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், வர போகும் மிக முக்கிய தேர்தல்.
கடந்த 10 ஆண்டுகளாய் பாஜக அரசும் அதன் பின்னால் இருக்கும் ஆர்.எஸ்.எஸ் என்ன செய்தது என பார்க்க வேண்டும்.இந்த போர்க்களமாக மாறி விட்டது.இரு சித்தாந்தங்களுக்கு இடையான தேர்தலாக மாறிவிட்டது.ஒரு சித்தாந்தம் ஜாதி மதம் என பிரித்து வேற்றுமைகளை வைத்து வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.அதற்காக தான் இந்துத்துவா, ராமர் கோயில் என மத சம்பந்தமான வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்…
மற்றொரு பக்கத்தில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையும் மணீப்புரில் ஆரம்பித்து மகாராஷ்டிரா வரை நடைபயணம் மேற்கொண்டனர்.
மக்கள் மத்தியில் ஒரு இணக்கத்தையும் ஒற்றுமையும் ராகுல் காந்தி ஏற்படுத்தி உள்ளார் என்றும் கூறினார்.
மதவாத சக்திகளை தோற்க இந்தியா கூட்டணியை அமைத்துள்ளார்.காங் இல்லாத இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என பாஜக கூறுவது முட்டாள் தனம்..
அவர்களது தவறுகள் திருத்தப்படவேண்டும்..
மக்களுக்கு ஏற்காத சட்டங்களை இந்தியா கூட்டணி மாற்றி அமைக்கும் என்றார்.
மணிப்பூரில் மக்கள் படுகொலை செய்யப்பட்ட போது பிரதமர் வெளிநாடு சுற்றுப்பயணத்தில் இருந்தார். இப்பொழுதும் அவர் வெளிநாடு சென்று இருப்பார். தேர்தல் இருப்பதன் காரணமாக தான் அவர் இந்தியாவில் இருக்கிறார்
என விமர்சித்த எம்பி,நாட்டின் பொருளாதாரத்தை பிரதமர் வீணடித்து விட்டார் என்றார்.
தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களுக்கு மீண்டும் பிடிக்கும் என கூறப்படுவது குறித்து கேட்டதற்கு,400 இடங்களை எடுப்பதாக பாஜக கூறுவதில் தவறு இல்லை..450 என கூட ஏற்றி சொல்லுங்க என பாராளுமன்றத்தில் கூறினேன்..
400 தொகுதிகளில் EVM செட் செய்துள்ளார் என கிண்டலாக கூறினேன்.
400 எட்ட முடியாது.அது இந்தியா கூட்டணியின் எண்ணாக மாறும்..
பாஜக அகற்றப்பட வேண்டும் என்றும் எம்பி தெரிவித்தார்.
நைனார் நாகேந்திரனிடம் பணம் பிடிக்கப்பட்டது குறித்து கேட்டதற்கு,
பணம் இருப்பவர்களிடம் தான் பிடிக்கிறார்கள்..எங்கள் பணத்தை பாங்க்கிலேயே பிடித்து விட்டனர்..பணம் பெரிய செய்யும்…ஆனால் தேர்தல் முடிவை மாற்றாது எனவும் எம்பி ஜெயக்குமார் தெரிவித்தார்..