in

சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் ஆடிப்பெருக்கு விழா

சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு புதுமணப் பெண்கள் சுமங்கலிப் பெண்கள் தாலிக்கயிறு மாற்றி வழிபாடு செய்தனர்- திருக்கோவிலில் திரளான பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் தென் தமிழகத்தில் சிறப்பு வாய்ந்த சிவஸ்தலமாகும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் திருக்கோவிலில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு திரளான பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்

ஆடிப்பெருக்கு நாளில் கன்னிப் பெண்கள் கோமதி அம்மனை வழிபட்டால் சிறந்த கணவர்கள் அமைவார்கள் என்பதும் அதேபோன்று புதுமனப்பெண்கள் ஆடிப்பெருக்கு அன்று புதிய மஞ்சள் கயிற்றை மாற்றிக் கொள்வதும் சுமங்கலிப் பெண்கள் தாலி பெருக்கி போட்டுக் கொள்வதும் இதனால் கணவனின் ஆயுள் நீடிக்கும் என்பதும் நம்பிக்கையாக இருந்து வருகிறது

இந்த நிலையில் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் ஆடிப்பெருக்கு விழாவை தொடர்ந்து சுமங்கலிப் பெண்கள் தாலி பெருக்கி போட்டுக் கொண்டும் புதுமணப்பெண்கள் புதிய மஞ்சள் கயிற்றை மாற்றி புதிதாக கட்டிக் கொண்டும் ஐதீகத்தின்படி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றிக் கொண்டனர் மேலும் பக்தர்கள் மாவிளக்கு எடுத்தும் மகாதீபம் ஏற்றியும் தங்கள் நேற்றி கடனை செலுத்திக் கொண்டனர்

ஆடிப்பெருக்கு அன்று குலதெய்வ வழிபடுவது சிறப்பு என்று கருதப்படும் நிலையில் சங்கரன்கோவில் கோமதி அம்மனை குலதெய்வமாக கொண்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பக்தர்கள் கோவிலில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றிக் கொண்டனர்

What do you think?

பெருங்குளம் அருள்மிகு மாயக் கூத்தர் திருக்கோயிலில் மஹாநிவேதநம் (அன்னக்கூட உற்சவம்)

திருவாரூர் தியாகராஜர் கோயில் கமலாலயத் திருக்குளத்தில் ஆடி அமாவாசை திரளானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்