திண்டிவனம் ஈஸ்வரன் கோயில் ரோடு சிமெண்ட் சாலை அமைக்கும் பணி துவக்கம்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஈஸ்வரன் கோவில் ரோடு முதல் காமாட்சி அம்மன் கோவில் தெரு வரை சிமெண்ட் சாலை இருந்தது.
இந்த சாலை பாதாள சாக்கடை திட்டப் பணிகளின் போது முற்றிலுமாக சேதம் அடைந்தது.
இதனைத் தொடர்ந்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அப்பகுதியில் புதிய சிமெண்ட் சாலை அமைப்பதற்கான ரூ. 1 கோடியே 16 இலட்சம் நிதி நகர மன்றத்தில் ஒப்புதலுடன் ஒதுக்கப்பட்டது.
அதற்கான பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா திண்டிவனம் தீர்த்தகுளம் பகுதியில் நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன் தலைமை தாங்கி அடிக்கல் நாட்டு பணிகளை துவங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையாளர் குமரன் முன்னிலை வகித்தார். மேலும் இதில் நகர மன்ற துணைத் தலைவர் ராஜலட்சுமி வெற்றிவேல், நகர மன்ற உறுப்பினர்கள் ரம்யா ராஜா, சரவணன், பாஸ்கர், பாமக மாவட்ட செயலாளர் ஜெயராஜ், திமுக நிர்வாகிகள் பரணிதரன், முருகன்,காமராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.