in

விநாயகர் சதுர்த்தி சிலைகள் அமைப்பு தொடர்பாக ஆலோசனை கூட்டம்

விநாயகர் சதுர்த்தி சிலைகள் அமைப்பு தொடர்பாக ஆலோசனை கூட்டம்

 

சிதம்பரம் சார்-ஆட்சியர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி சிலைகள் அமைப்பு தொடர்பாக ஆலோசனை கூட்டம். உட்கார இடம் இல்லாததால் வெளியே வந்து அமர்ந்த சிலை அமைப்பாளர்கள். போலீசார் சமரசம் செய்து திருமண மண்டபத்தில் கூட்டம் நடத்தினர்.

வருகிற 7 ஆம் தேதி விநாயகர் சதுர்த்து விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சிதம்பரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சிலைகள் அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்தது.

இதில் எதிர்பார்த்ததை விட ஏராளமானோர் கூட்டத்தில் பங்கேற்றனர். இதனால் கூட்டம் நடந்த அரங்கில் உட்காருவதற்கு அனைவருக்கும் இடம் இல்லை. இதையடுத்து இடமில்லாத சிலர் திடீரென கூட்டத்தை விட்டு வெளியே வந்து சார் -ஆட்சியர் அலுவலகத்தின் வாயிலில் தரையில் அமர்ந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து வந்த போலீஸ் மற்றும் வருவாய் துறையினர் தரையில் அமர்ந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இட வசதியுடன் திருமண மண்டபத்தில் கூட்டம் நடத்தப்படும் என கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

இதையடுத்து சிதம்பரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் விநாயகர் சிலை தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் உரிய விதிமுறைகளின்படி விநாயகர் சிலை நிறுவ வேண்டும் என அதிகாரிகள் அறிவுரைகள் வழங்கி பேசினர்.

What do you think?

பேரிட மீட்பு குழு மற்றும் தமிழ்நாடு தீயணைப்பு துறை ஒத்திகை நிகழ்ச்சி

ஸ்ரீ குரு தட்சணாமூர்த்தி சுவாமிகள் மடத்தில் 189 ஆவது ஆண்டு குருபூஜை விழா