in

வேறு சின்னத்தில் போட்டி: ம.தி.மு.க., வேட்பாளர் துரை வைகோ அறிவிப்பு


Watch – YouTube Click

வேறு சின்னத்தில் போட்டி: ம.தி.மு.க., வேட்பாளர் துரை வைகோ அறிவிப்பு

தி.மு.க., கூட்டணியில் உள்ள ம.தி.மு.க., திருச்சி லோக்சபா தொகுதியில், பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரையை வேட்பாளராக நிறுத்தி உள்ளது.
ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால், ம.தி.மு.க.,வினர் கேட்ட பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது, என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து விட்டது. நீதிமன்றமும் அதையே பரிந்துரை செய்துள்ளது.

இந்நிலையில், திருச்சி தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் ம.தி.மு.க., வேட்பாளர் துரை, திருச்சியில், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ம.தி.மு.க.,வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தான் கூறியுள்ளது. நீதிமன்றமும், தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை பரிந்துரை செய்துள்ளது.

ஏற்கனவே. ம.தி.மு.க., போட்டியிட்ட சின்னத்தை, பொது சின்னமாக வைக்காமல், ‘லாக்’ செய்து வைத்துள்ளனர். தேர்தல் விதிமுறைக்கு உட்பட்டு, அதை ‘ரிலீஸ்’ செய்து விட்டால், ம.தி.மு.க.,வுக்கு பயன்படுத்திக் கொள்வதாக கேட்டோம். சட்டப்படி சின்னத்தை கொடுக்க முடியும் என்றாலும், அதனால், சில பிரச்னைகள் வரும். அதுவே தவறான முன் உதாரணமாகி விடக்கூடாது, என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

தேர்தல் விதிமுறைகள்படி, சட்டத்தில் இடம் இருப்பதாகக் கூறி, மீண்டும் அந்த சின்னத்தை கேட்டோம். ம.தி.மு.க.,வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கும் விவகாரத்தில், தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள முடிவைத் தான், நீதிமன்றமும் பரிந்துரை செய்துள்ளது. இதற்கு, மேல் முறையீடு செய்ய வாய்ப்பு இருந்தாலும், தேர்தல் பிரச்சாரம் துவங்கி போய்க் கொண்டிருக்கும் நிலையில், இனியும் தாமதப்படுத்த வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம். இதற்கு மாற்றாக வேறு இரண்டு சின்னங்கள் தேர்வு செய்து, அதில் ஏதேனும் ஒன்றை பெற்று, அதில் போட்டியிடுவோம். அந்த சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்த்து விடுவோம், என்ற நம்பிக்கை உள்ளது.

கடந்த காலங்களை போல், இப்போது இல்லை. வேட்பாளரையும், சின்னத்தையும் நன்கு தெரிந்து கொண்டு, ஓட்டு போடும் அளவுக்கு மக்கள் தெளிவாக உள்ளனர். அனைவரின் கைகளிலும் மொபைல் போன் இருப்பதால், 24 மணி நேரத்தில், சின்னத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க முடியும்.

மதவாத பா.ஜ.,கட்சியை எதிர்க்கும் உண்மையான அணியாக தி.மு.க., கூட்டணியை மக்கள் பார்க்கின்றனர். எனவே, அந்த கூட்டணியில் போட்டியிடும் ம.தி.மு.க., வேட்பாளரையும், அவரது சின்னத்தையும் மக்கள் தெரிந்து கொண்டு ஓட்டளிப்பார்கள். இதனால், சின்னத்தை பொருத்தவரை எந்த பின்னடைவும் ஏற்படப் போவதில்லை. நாங்கள் நம்பிக்கையோடு இருக்கிறோம்.

கடந்த தேர்தல்களில், சில தலைவர்கள், புதிய சின்னங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். மதவாத பா.ஜ., வந்து விடக் கூடாது, என்பதில் தமிழக மக்கள் தெளிவாக இருக்கின்றனர்.


Watch – YouTube Click

What do you think?

சிலிண்டருக்கு மாலை, சைக்கிளில் விறகு மண்வெட்டியுடன் மாட்டு வண்டியில் வந்து வேட்பு மனு தாக்கல்

அதிமுகவின் சார்பில் போட்டியிடும் கருப்பையாதனது பிரச்சாரத்தை தொடங்கினார்