கும்பகோணம் அதிமுக ஆலோசனை கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன் மேடையில் பேசுவதற்குள் சர்ச்சை
தஞ்சை கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் கள ஆய்வு ஆலோசனை கூட்டம் கும்பகோணம் காஞ்சி சங்கரா மஹாலில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.கே. பாரதிமோகன் தலைமை தாங்கினார்.மாநகர செயலாளர் ராமநாதன்,ஒன்றிய செயலாளர்கள் சோழபுரம் அறிவழகன், ஏ. வி.கே.அசோக் குமார் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.சிறப்பு அழைப்பாளராக கழக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன்,கழக அமைப்புச் செயலாளர் தங்கமணி,காமராஜ்,மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்
முன்னதாக திண்டுக்கல் சீனிவாசன் மேடையில் பேசிய முற்பட்டபோது அதிமுக முன்னாள் நகராட்சி கவுன்சிலர் அம்பிகாபதி தன்னை பேச விட வேண்டும், கட்சி தொண்டர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை, அது மட்டும் இல்லாமல் தொண்டர்களிடம் குறைகள் கேட்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆலோசனை கூட்டத்தில் கோஷங்கள் எழுப்பினார் அப்போது பேச முயன்ற திண்டுக்கல் சீனிவாசன் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி அவரது இருக்கையிலேயே அமர்ந்துவிட்டார்.பின்னர் அவரை அதிமுக கட்சியினர் குண்டு கட்டாக தூக்கி வெளியேற்றினர்.இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.