கரூர் கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா.
கரூர் வெண்ணமலை கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் 22 , 23 & 24 வது ஆண்டு பட்டமளிப்பு விழா அட்லஸ் கலையரங்கில் ஏப்ரல் 13 ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணிகளை துவங்கி மதியம் 1மணி வரை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் முனைவர் செல்வம் கலந்து கொண்டு, இளங்கலை மற்றும் முதுகலை உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகளில் பட்டம் பெற்ற 1,520 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
கொங்கு அறக்கட்டளை தலைவர் அட்லஸ் நாச்சிமுத்து, இணைச்செயலாளரும் கல்லூரியின் தாளாளருமான மீனாட்சி. ரமேஷ், கொங்கு கலை அறிவியல் கல்லூரி பொறுப்பு முதல்வர் வனிதாமணி, கொங்கு கல்வி அறக்கட்டளையின் செயலாளர் விசா.மா சண்முகம், பொருளாளர் வி.வீரப்பன், துணைத்தலைவர் கே.அம்மையப்பன் உள்ளிட்ட அறக்கட்டளை நிர்வாகிகள் கல்லூரி இருபால் பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் பெற்றோர் கலந்து கொண்டனர்.
கொங்கு அட்லஸ் கலை அரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 2000க்கும் மேற்பட்ட மாணவ ,மாணவிகளும் பெற்றோர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.